Monday, 24th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நான் கொரோனாவைவிட பயங்கரமானவன் என போலீசாரை மிரட்டிய இந்து மக்கள் கட்சி பிரமுகர் கைது

ஏப்ரல் 03, 2020 11:25

வாலாஜா: ராணிப்பேட்டை மாவட்டத்தில் 144 தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில் சாலையில் சுற்றிய இந்து மக்கள் கட்சி பிரமுகரை போலீசார் கைது செய்தனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா திருத்தணி தெத்து தெருவை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது35). திருமண அலங்கரிப்பு தொழில் செய்து வருகிறார்.

 இந்து மக்கள் கட்சி மாவட்ட செயலாளராகவும் உள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் 144 தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில் நேற்று இரவு சதீஷ்குமார் தடையை மீறி சாலையில் பைக்கில் சுற்றினார்.

அப்போது வாலாஜா பஸ் நிலையத்திற்கு வந்தார். அவரை போலீசார் பிடித்து 144தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில் எதற்காக வெளியில் சுற்றுகீறீர்கள் என கேட்டனர். சதீஷ்குமார் நான் கொரோனாவை விட கொடியவன் என்னை எதுவும் செய்ய முடியாது என மிரட்டினார்.

மேலும் போலீசாரை தகாத வார்த்தைகளால் திட்டி பணி செய்யவிடாமல் தடுத்தார். அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவர் ஜெயிலில் அடைத்தனர்.

தலைப்புச்செய்திகள்