Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கொரோனா வைரஸ் பாதிப்பால் பெண்களை விட ஆண்களே அதிகம் பலி

ஏப்ரல் 05, 2020 09:34

சென்னை: ‘பெண்களைவிட ஆண்களையே கொரோனா வைரஸ் எளிதாக தாக்குகிறது என்றும், இதுவரை வைரஸ் தாக்கி உயிரிழந்தவர்களில் பெண்களைவிட ஆண்களின் இறப்பு சதவிகிதமே அதிகம்’ என்றும் ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது.

இன்னும் மருந்தே கண்டுபிடிக்காத இந்த கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து வருகின்றனர். லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அனைவருமே சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டும் வருகின்றனர். இந்த வைரஸ் வைரஸ் குறித்து நித்தம் ஒரு தகவலை விஞ்ஞானிகள் கண்டுபிடித்து சொல்லி வருகிறார்கள். அந்த வகையில் புது தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் பெண்களைவிட ஆண்களே அதிகம் உயிரிழப்பதாக ஆய்வு முடிகளில் தெரியவந்துள்ளது.

அதாவது பெண்களைவிட ஆண்களே 3 மடங்கு அதிகமாக உயிரிழக்கிறார்கள். இந்த வைரஸ் அதிகமாக பாதித்து உலுக்கி எடுத்தது சீனா, அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகளைதான். அந்த நாடுகளில் உயிரிழந்தவர்களின் கணக்கை பார்த்தால் 71 சதவீதம் ஆண்களும் 29 சதவீதம் பெண்களும் உயிரிழந்துள்ளனர்.

ஏற்கனவே சிகரெட் நிறைய பிடித்திருப்பவர்களுக்கு இந்த வைரஸ் தொற்றும் சேர்ந்து கொண்டு சீக்கிரத்திலேயே உயிரிழக்க செய்து விடுகிறது. ஆண்களின் வெளிநடமாட்டங்கள் அதிகம். அப்படி இவர்கள் வெளியே செல்லும் பகுதிகளும் அசுத்தம், மாசு போன்றவை அதிகம் உள்ளன. ஆனால், பெண்களுக்கு இந்த பழக்கங்கள் எல்லாமே குறைவு. மேலும் பெரும்பாலானோர் வீட்டிலேயே உள்ளனர். இதனால் கைகளை சுத்தமாக கழுவி கொள்கிறார்கள்.

ஆண்கள் வெளியே சுற்றுவது மட்டுமின்றி கைகளை அடிக்கடி கழுவுவது கிடையாது. அலட்சியத்தால் பயம் இல்லாமல் போய்விட்டது. அதனால் வைரஸ் எளிதாக ஒட்டிக் கொள்கிறது.. அப்படியே வைரஸ் தாக்கம் இருந்தாலும் உடனே ஆஸ்பத்திரிகளுக்கும் போவது இல்லை. தாமதமாகத்தான் சிகிச்சை எடுத்துக் கொள்கிறார்கள். அதனால்தான் இவர்களது உயிரிழப்பு அதிகம்.

பெண்களை பொறுத்தவரை ஹார்மோன்களில் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருப்பது உயிரிழப்புகள் தடுக்கப்படுவதற்கு காரணம் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அப்படியே வைரஸ் தாக்கினாலும், இயல்பிலேயே மன தைரியம் உள்ளவர்கள் பெண்கள். அதனால் இதுபோன்ற அபாயங்களை ஆண்களை விட பெண்களே எளிமையாக எதிர்கொள்கிறார்கள்.

உலகெங்கும் 100 வயதை தாண்டி வாழ்பவர்களில் 80 சதவீதம் பேர் பெண்கள்தான். அதுவும் 110 வயதை எட்டுபவர்களில் 95 சதவீதம் பேர் பெண்கள் ஆவர். பெண்களின் குரோமோசோம்கள் தான் இதற்கெல்லாம் மூல காரணம். பெண்களின் டி.என்.ஏ.வில் 2 ஙீ குரோமோசோம்கள் உள்ளன. ஆனால், ஆண்களுக்கோ 1 ஜ் குரோமோசோம் தான் உள்ளன. இந்த ஜ் குரோமோசோம் தான் நோய் எதிர்ப்பு சக்தியை பராமரிக்கும் வேலையை செய்கிறது.

ஒரு பக்கம் குரோமோசோம்கள் மற்றொரு பக்கம் ஹார்மோன்கள், இன்னொரு பக்கம் ஈஸ்ட்ரோஜென் இவை எல்லாமே சேர்ந்து பெண்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து அவர்கள் உயிரை பத்திரமாக காத்து நிற்கிறது.. பார்ப்பதற்கு பெண்களைவிட ஆண்களே பலசாலிகளாக காணப்பட்டாலும், இயற்கையிலேயே பெண்களே வலிமை மிக்கவர்களாக நின்று, அனைத்து வைரஸையும் எதிர்கொள்கின்றனர்.

தலைப்புச்செய்திகள்