Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

முதல்வர் நிவாரண நிதி: கோவை கத்தோலிக்க மறை மாவட்டம் ரூ.25 லட்சத்துக்கான காசோலை வழங்கல்

ஏப்ரல் 05, 2020 11:21

கோவை: கொரோனா வைரஸ் தொற்று சார்பில் ஏற்படும் நெருக்கடியை சமாளிக்க தமிழக அரசு சார்பில் முதல்வர் நிவாரண நிதி உருவாக்கப்பட்டு நன்கொடைகள் பெறப்படுகிறது. இதற்கு தனிநபர்கள், அரசியல் கட்சிகள், தொழில் நிறுவனங்கள் என பலரும் நன்கொடைகளை வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில் கோவை கத்தோலிக்க மறை மாவட்டம் சார்பாக பிஷப் தாமஸ் அக்குவினாஸ் தலைமையில் ரூபாய் 25 லட்சத்திற்கான காசோலையை கோவை மாவட்ட ஆட்சியர் ராசமணியிடம் வழங்கப்பட்டது. இதில் மறை மாவட்ட முதன்மை குரு அருட்தந்தை ஜான் ஜோசப்,மறை மாவட்ட முதன்மை குரு மை ஜார்ஜ் தனசேகர், மறை மாவட்ட பொருளாளர் அருட்தந்தை பிரான்சிஸ் மற்றும் சமூக சேவா சங்க இயக்குனர் அருண் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து பிஷப் தாமஸ் அக்குவைனஸ் கூறுகையில், ‘கோவை மறை மாவட்டத்திற்கு உட்பட்ட 74 ஆலயங்களிலும் அந்தந்த அருட்தந்தையர்களின் தலைமையில் கொரோனா வைரஸ் நிவாரண பொருட்கள் வழங்கி வருகிறோம். இந்த வைரஸ் பரவாமல் தடுக்க பொதுமக்கள் மத்திய, மாநில அரசுகளின் அறிவுறுத்தலை பின்பற்றி நடக்க வேண்டும்’ என கேட்டுக்கொண்டார்.

தலைப்புச்செய்திகள்