Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கோவையில் தினமும் 1,000 பேர் பசியை போக்கும் வகையில்; இந்து முன்னணியின் ‘ஐந்தாவது கிச்சன்’ உணவு கூடம் துவக்கம்

ஏப்ரல் 05, 2020 11:35

கோவை: கோவை வேலாண்டி பாளையத்தில் இந்து முன்னணி மாநகர் மாவட்டம் சார்பில் ஐந்தாவது கிச்சன் என்ற பெயரில் உணவு கூடம் துவக்கப்பட்டது.

இந்த ஐந்தாவது கிச்சன் என்ற பெயரில் வேலாண்டிபாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பொது மக்களின் பசியைப் போக்கிடவும், பொது மக்களின் துயரத்தை போக்கும் வண்ணம் வரும் 14ம் தேதி வரை தொடர்ந்து நாள் ஒன்றுக்கு 1,000 பேர் பயனடையும் வகையில் ஆரோக்கியமான உணவுகளை சுகாதாரமான முறையில் தயாரித்து பொது மக்களுக்கு தானமாக வழங்கி வருகின்றனர்.

இந்த உணவு வழங்கும் திட்டத்தை தமிழகத்தில் ரியல் எஸ்டேட் துறையில் கோவையின் அடையாளமாக திகழும் ஜெ.ஆர்.டி.பில்டிங் அண்ட் கன்ஸ்டிரக்சன் நிறுவன தலைவர் தொழிலதிபர் ராஜேந்திரன் மற்றும் இந்து வியாபாரிகள் சங்க தலைவர் பழனிச்சாமி ஆகியோர் உணவு கூடத்தை திறந்து வைத்து, பொதுமக்களுக்கு பார்சல் முறையில் உணவு வழங்கினர்.

இந்து முன்னணி அமைப்பை சேர்ந்த கோவை மாவட்ட தலைவர் தசரதன் உணவு வழங்கும் திட்டத்திற்கு தலைமை தாங்கினார். இந்நிகழ்வில் மாநில நிர்வாகக் குழு உறுப்பினர்  குணா, கோவை கோட்ட செயலாளர் சதீஷ், கோட்ட பேச்சாளர் கிருஷ்ணன், மாவட்ட செயலாளர் ஜெய்சங்கர், மாவட்ட செய்தி தொடர்பாளர் தனபால் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள், நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் உடனிருந்தனர்.

தலைப்புச்செய்திகள்