Friday, 5th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தமிழகத்தில் மேலும் 86 பேருக்கு கொரோனா: மொத்த எண்ணிக்கை 571 ஆக உயர்வு; 507 பேர் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள்

ஏப்ரல் 05, 2020 01:41

சென்னை: தமிழகத்தில் மேலும் 86 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் மொத்த எண்ணிக்கை 571 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கடந்த மாதம் 30-ந்தேதி வரை கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருந்தது. ஆனால், டெல்லியின் நிஜாமுதீன் பகுதியில் உள்ள மசூதி ஒன்றில் (நிஜாமுதீன் மர்காஸ்) தப்லிகி ஜமாத் என்ற இஸ்லாமிய மத அமைப்பு சார்பில் இஸ்லாமிய மத குருக்கள் பங்கேற்ற கூட்டம் கடந்த மாதம் நடைபெற்றது. அதில் தமிழகம், தெலுங்கானா, காஷ்மீர் உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர். தமிழகத்தில் இருந்து மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றது உறுதியானது.

அவர்களை கண்டுபிடித்து தனிமைப்படுத்தி பரிசோதனை செய்தனர். அப்போது அவர்களில் பெரும்பாலானோருக்கு கொரோனா இருந்தது தெரியவந்தது. இதனால் மார்ச் 31-ந்தேதியில் இருந்து தினந்தோறும் 50-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறதி செய்யப்பட்டது. இதனால் எண்ணிக்கை ஜெட் வேகத்தில் உயர்ந்தது.

மார்ச் 31-ந்தேதி 57 பேருக்கும், ஏப்ரல் 1-ந்தேதி 110 பேருக்கும், 02-ந்தேதி 75 பேருக்கும், 03-ந்தேதி 81 பேருக்கும், நேற்று 74 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று மேலும் 86 பேருக்கு கொரோனா தொற்று செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 571 ஆக உயர்ந்ததுள்ளது. இன்று 86 பேர்களில் 85 பேர் டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்புச்செய்திகள்