Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வரி சேமிப்பில் 80ஜி தான் பெஸ்ட்

மார்ச் 09, 2019 06:28

இந்தியாவில் வருமான வரி செலுத்துவோர் அதிகளவு தொகையை சேமிக்க 80ஜி சட்டப்பிரிவை பயன்படுத்தலாம். எதுதர்மாவின் என்ற அறக்கட்டளை மூலம் நன்கொடை வழங்கினாலும் வரிசேமிப்பு பெறலாம்.  

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் வந்துவிட்டாலே, பலரும் வருமான வரி செலுத்துவதில் எங்கிருந்து சேமிக்க முடியும் என்ற வாக்கில் வணிக வல்லுநர்களை சுற்றி வருவர். இன்னும் சிலர் வருமான வரி செலுத்தும் போது 80சி எனும் பிரபல பிரிவை பயன்படுத்தி மொத்த வருவாயில் இருந்து அதிகபட்சம் ரூ.1.50 லட்சத்திற்கு விலக்கு பெறுவர். வரி சேமிப்பின் போது பெரும்பாலானோர் 80சி பிரிவை நாடும் நிலையில், வரியை சேமிக்க மற்றொரு பிரிவும் இருக்கிறது. 

வருமான வரி செலுத்துவோர் 80ஜி பிரிவின் கீழ் தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடை வழங்கியதற்காக வரிச்சலுகை பெற முடியும். 80ஜி பிரிவின் கீழ் தனிநபர்கள், கூட்டுக்குடும்பம், நிறுவனங்கள் அல்லது கூட்டு நிறுவனங்கள் சலுகை பெற முடியும். இந்த பிரிவை பயன்படுத்தி வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்களும் சலுகை பெறலாம். வரி சேமிப்பு மட்டுமின்றி இது கவர்ச்சிகர முதலீட்டு திட்டமாகவும் இருக்கிறது. 

80ஜி பிரிவின் கீழ் தொண்டு நிறுவனங்களுக்கு நிதி வழங்குவோருக்கு அரசு வரி செலுத்துவதில் சலுகை அளிக்கிறது. வருமான வரித்துறை வலைத்தளத்திற்கு சென்று, மீட்பு நிதி மற்றும் தொண்டு நிறுவனங்கள் பிரிவில் இந்த 80ஜி சட்டப்பிரிவை பயன்படுத்த முடியும். 

வருமான வரி சட்டம் 80ஜி பிரிவின் கீழ் 100 சதவிகிதம் வரி விலக்கு பெற எதுதர்மா மூலம் நன்கொடை வழங்கலாம். எதுதர்மா  வலைதளத்தில் நிதியுதவி தேவைப்படும் ஏழை எளியோரின் விவரங்கள் இடம்பெற்றிருக்கும். இங்கு உயிருக்கு போராடும், நிதியுதவி தேவைப்படுவோரின் விவரங்களை பார்த்து, அவர்களுக்கு அவரவர் விரும்பும் தொகையை செலுத்தலாம். 

வரிசேமிப்புக்காக நன்கொடை வழங்க நினைப்போர் மருத்துவம் சார்ந்த உதவிகள் மட்டுமின்றி கல்வி மற்றும் விளையாட்டு துறையில் சாதிக்க விரும்புவோருக்கும் தங்களது மேலான ஆதரவை எதுதர்மா வலைதளம் வாயிலாக வழங்க முடியும். 

இவ்வாறு கையில் கிடைக்கும் சிறு தொகையை நன்கொடையாக வழங்கி உதவி வேண்டுவோரின் உயிரை காப்பாற்றுவதுடன், வருமான வரி செலுத்தும் போது 80ஜி பிரிவின் கீழ் வரி விலக்கு பெற முடியும். மனதில் மற்றவர்களுக்கு உதவும் எண்ணம் கொண்டவர்கள், இனி உதவி செய்து அதற்கு வரி சேமிப்பும் பெறலாம்.  
 

தலைப்புச்செய்திகள்