Friday, 5th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஞாயிறு இரவு 9 மணி 9 நிமிடம்: சென்னையிலும் களைகட்டியது ஒற்றுமை தீபம்

ஏப்ரல் 05, 2020 05:36

சென்னை: பிரதமர் வேண்டுகோளை ஏற்று நாடு முழுவதும் மக்கள் தங்களது வீடுகளில் மின் விளக்குகளை அணைத்துவிட்டு விளக்குகள், மெழுகுவர்த்திகளை ஏற்றிவைத்தனர்

இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் தினமும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்தியா நாடு முழுவதும் மொத்தம் 3671 பேரை கொரோனா பாதித்துள்ளது. தமிழகத்தில் மட்டும் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 485 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா காரணமாக பலியானவர்கள் எண்ணிக்கை 99 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக கடந்த மாதம் 25-ந்தேதியில் இருந்து ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 10-வது நாளான கடந்த 3-ந்தேதி பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு வீடியோ மூலம் ஒரு செய்தியை வெளியிட்டார்.

அப்போது, ஏப்ரல் 5-ம்தேதி இரவு 9 மணிக்கு விளக்குகள் அனைத்தையும் 9 நிமிடங்கள் அணைத்துவிட்டு விளக்கு, மெழுகுவர்த்தி, டார்ச் லைட் அல்லது செல்போன் லைட் ஏதாவது ஒன்றை ஒளிர விடவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். கொரோனா என்னும் இருளுக்கு எதிராக நாம் ஒன்றாக இணைந்து செயல்பட போகிறோம். நம்முடைய கூட்டு பிரார்த்தனையை வலுப்படுத்தும் வகையில் கொரோனாவுக்கு எதிராக அனைவரும் தங்கள் ஒற்றுமையை காட்ட வேண்டும் என்று கூறினர்.

அதன்படி இன்று சரியாக 9 மணிக்கு இந்தியாவில் உள்ள மக்கள் தங்களது வீட்டில் மின்சார லைட்டுகளை அணைத்துவிட்டு விளக்குகளை  ஏற்றினர். மேலும் மெழுகுவர்த்தி ஏந்தியும், டார்ச் லைட் அடித்தும் தங்கள் ஒற்றுமையை நிலைநாட்டினர்.இதுதவிர பல்வேறு பகுதிகளில் பட்டாசு, வானவெடிகளை வெடித்தும் மக்கள் தங்கள் உணர்வுகளை வெளிக்காட்டினர்.

குறிப்பாக சென்னையின் அனைத்து இடங்களிலும் தீபம் ஏற்றப்பட்டது. சென்னை முகப்பேர் கிழக்கில் மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் தீபம் ஏற்றியும், மெழுகுவர்த்தி, டார்ச் லைட் அடித்தும் தங்கள் ஒற்றுமையை காட்டினர். 

தலைப்புச்செய்திகள்