Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஊரடங்கால் டெல்லியில் சிக்கிக் கொண்ட தமிழக எம்.பி.,க்கள்

ஏப்ரல் 06, 2020 05:42

சென்னை: நாடு தழுவிய ஊரடங்கால், தமிழக,எம்.பி.,க்கள் நால்வர், டெல்லியில் சிக்கிக் கொண்டுள்ளனர். விமானம், ரயில் என, எந்த போக்குவரத்தும் இல்லாததால், இவர்கள் சொந்த ஊருக்கு செல்ல முடியவில்லை.நாட்டில், கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், மற்ற எம்.பி.,க்கள், தங்கள் தொகுதிகளுக்கு சென்று, மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகின்றனர்.

ஆனால், இந்த நால்வரும், தொலைபேசி வாயிலாக கட்சி தொண்டர்களுடன் பேசி, தொகுதி மக்களுக்கு தேவையானவற்றை செய்ய உத்தரவிட்டு வருகின்றனர். சம்பந்தப்பட்ட கலெக்டர்களுடனும், டெல்லியில் இருந்தே பேசி வருகின்றனர். இந்த நான்கு எம்.பி.,க்களில், முன்னாள் மத்திய அமைச்சர் ராஜாவும் ஒருவர். ராஜாவிற்கு உதவியாளராக பல ஆண்டுகளாக பணியாற்றுபவர் தர்மலிங்கம். இவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்படவே, ராஜாவே இவரை, தன் காரில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.

டாக்டர்கள் அனைவரும் கொரோனா சிகிச்சையில், ‘பிசி’யாக இருந்தனர்.முன்னாள் அமைச்சர் என்பதால், ஒரு டாக்டர் முன்வந்து, தர்மலிங்கத்திற்கு உடனடியாக, ‘ஆப்பரேஷன்’ செய்து பிழைக்க வைத்தார். ஆப்பரேஷன் முடியும் வரை, எட்டு மணி நேரம் மருத்துவமனையிலேயே காத்திருந்தாராம் ராஜா. ராஜா இல்லாவிட்டால், தனக்கு எந்த டாக்டரும் சிகிச்சை அளித்திருக்கமாட்டார் என, நன்றிக் கண்ணீர் வடிக்கிறார் தர்மலிங்கம்.

தலைப்புச்செய்திகள்