Friday, 5th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

எதிர்க்கட்சி தலைவர்களுடன் பிரதமர் ஆலோசனை நடத்தியதற்கு சிதம்பரம் வரவேற்பு

ஏப்ரல் 06, 2020 07:18

புதுடெல்லி: கொரோனா தடுப்பு பணிகள் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதிகள், பிரதமர்கள் மற்றும் எதிர்க்கட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடத்தியதற்கு முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரம் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சிதம்பரம் வெளியிட்ட ட்வீட்: இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் முக்கியமான இரண்டு வார காலகட்டத்திற்குள் நுழைகின்றன. எதிர்க்கட்சி தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தியது நல்ல விஷயம். கொரோனாவை எதிர்க்க மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு அனைவரும் ஆதரவு அளிப்பார்கள் என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை. மத்திய அரசின் நடவடிக்கைகள் குறித்து, எதிர்க்கட்சிகள் குறை கூறினால், அதனை ஆக்கப்பூர்வமானதாக எடுத்து கொள்ள வேண்டும். இவ்வாறு அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பு பணிகள் தொடர்பாக, பிரதமர் மோடி, நேற்று முன்னாள் ஜனாதிபதிகள் பிரதிபா பாட்டீல், பிரணாப் முகர்ஜி, முன்னாள் பிரதமர்கள் மன்மோகன் சிங், தேவகவுடா ஆகியோருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆலோசனை நடத்தினார். காங்கிரஸ் தலைவர் சோனியா, மேற்கு வங்க முதல்வர் மம்தாபானர்ஜி, ஒடிசா முதல்வர் நவீன்பட்நாயக், திமுக தலைவர் ஸ்டாலின், அகாலிதளம் தலைவர் பிரகாஷ் சிங் பாதல், தமிழக முதல்வர் இ.பி.எஸ்., உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தினார்.

தலைப்புச்செய்திகள்