Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கோடை காலத்தில் கொரோனா தாக்கம் குறையுமா: உலக சுகாதார அமைப்பு விளக்கம்

ஏப்ரல் 06, 2020 07:28

புதுடெல்லி: கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் கோடை காலம் துவங்குவது குறித்து பல நிபுணர்கள் நம்பிக்கை தெரிவித்திருந்தாலும், அதிக வெப்பநிலை வைரஸை முடிக்காது என்று உலக சுகாதார அமைப்பு (கீபிளி) ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொடர்பாக பல கட்டுக்கதைகள் பரப்பப்பட்டு வருகிறது. அவற்றுள் சில: அதிக வெப்பநிலை இருந்தால் கொரோனா பரவாது, மெத்தனால், எத்தனால், ப்ளீச் உள்ளிட்டவற்றை அருந்துவதால் வைரசை தடுக்கலாம், மது அருந்துவதால் அதிலுள்ள ஆல்கஹால் மூலமாக கொரோனா வராமல் பாதுகாப்பாக இருக்கலாம், சுவாச பயிற்சி மேற்கொண்டால் நுரையீரல் பிரச்னை வராது கொரோனாவில் இருந்து தப்பலாம் போன்ற பல கட்டுக்கதைகளை மக்களிடையே பரவி வருகிறது. இது போன்ற பொய்யான தகவல்களை யாரும் நம்ப வேண்டாம் என பல வல்லுநர்கள் அறிவுறுத்தியும், பொய்கள் உலாவ தான் செய்கிறது.

இந்நிலையில், உலக சுகாதார அமைப்பே பொய்யான தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இது தொடர்பாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளதாவது: சூரிய வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ்க்கு அதிகமாக இருந்தாலும் கொரோனாவை தடுக்காது. வானிலை எப்படி இருந்தாலும், கொரோனா தொற்றலாம். வெப்பமான வானிலை கொண்ட நாடுகளில் கூட கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. உங்களைப் பாதுகாத்துக் கொள்ள, உங்கள் கைகளை அடிக்கடி மற்றும் முழுமையாக சுத்தம் செய்வதை உறுதி செய்யுங்கள். உங்கள் கண்கள், வாய் மற்றும் மூக்கைத் தொடுவதைத் தவிர்க்கவும்.

மெத்தனால், எத்தனால் அல்லது ப்ளீச் குடிப்பதால் கொரோனாவை தடுக்கவோ குணப்படுத்தவோ முடியாது. இது மிகவும் ஆபத்தானது. ஏனெனில் இவை பொருட்களின் மேற்பரப்பில் உள்ள வைரஸை சுத்தம் செய்ய பயன்படுபவை. இதனை உட்கொள்வதால் உடலில் உள்ள வைரஸைக் கொல்லாது, ஆனால் உள் உறுப்புகளுக்கு தீங்கு விளைவிக்கும். மது அருந்துவதால் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாப்பாய் இருக்க முடியாது. அடிக்கடி அல்லது அதிகப்படியான மதுபானம் உட்கொள்வது சுகாதார பிரச்சினைகளின் அபாயத்தை அதிகரிக்கும்.

இருமல் அல்லது அசவுகரியமாம் இல்லாமல் உங்கள் சுவாசத்தை 10 வினாடிகள் அல்லது அதற்கு மேல் வைத்திருக்க முடிந்தது எனில், கொரோனா வைரஸ் அல்லது வேறு எந்த நுரையீரல் நோயிலிருந்தும் விடுபட்டுள்ளீர்கள் என அர்த்தமல்ல. நோயைப் பற்றி உறுதிப்படுத்த சிறந்த வழி ஆய்வக சோதனை. இந்த சுவாச பயிற்சியால் நீங்கள் அதை உறுதிப்படுத்த முடியாது, இது ஆபத்தானது கூட. இவ்வாறு உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

தலைப்புச்செய்திகள்