Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 690 ஆக உயர்வு : 8 பேர் பலி

ஏப்ரல் 08, 2020 06:58

சென்னை: தமிழகத்தில் மேலும் 69 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது உறுதி செய்யப்பட்டதையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 690 ஆக அதிகரித்துள்ளது. நேற்று வேலூர் அரசு மருத்துவமனையில் சென்னையைச் ரேந்த ஒருவர் (45) உயிரிழந்துள்ளார். இதையடுத்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 8 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் நிருபர்களை சந்தித்த சுகாதார செயலர் பீலா ராஜேஷ் கூறியதாவது:வீட்டு கண்காணிப்பில் 66,431 பேரும், அரசு கண்காணிப்பில் 353 பேரும் உள்ளனர். 23 நாள் கண்காணிப்பு முடிந்து 27,414 பேர் திரும்பியுள்ளனர். ஈரோட்டில் மேலும் ஒரு ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது. 

இதுவரை 5,305 பேருக்கு பரிசோதனை நடந்தது. 69 பேருக்கு கொரோனா உள்ளது உறுதியானது. அதில் 63 பேர், டில்லி மாநாட்டிற்கு சென்று வந்தவர்கள். மேலும் 3 பேர் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள். மற்றொருவர் வெளிமாநிலம் சென்று வந்தவர். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 690 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்த மேலும் ஒருவர் இன்று (ஏப்.,08) உயிரிழந்தார். பலி எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 64 வயது பெண் உயிரிழந்ததால், பலி 7 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தவர்களில் 19 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.15 லட்சம் வீடுகளில் 53 லட்சம் பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், 30, 629 களப்பணியாளர்கள் இந்த பணியில் உள்ளனர். தமிழகத்தில், 34 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு உள்ளது.

சென்னையில்  மட்டும் 39 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 149 ஆக அதிகரித்துள்ளது.

கோவை - 60
திண்டுக்கல்-45
நெல்லை-38
ஈரோடு-32
திருச்சி-30
நாமக்கல்-28
ராணிப்பேட்டை-27
செங்கல்பட்டு -24
மதுரை-24
கரூர்-23
தேனி- 23
தூத்துக்குடி-17
விழுப்புரம்-16
திருப்பூர் - 16
கடலூர்-13
சேலம்- 12
திருவள்ளூர்- 12
திருவாரூர்- 12
விருதுநகர்- 12
தஞ்சாவூர்- 12
நாகை - 11
திருப்பத்தூர்- 11
தி.மலை-11
குமரி-6
காஞ்சிபுரம் - 6
சிவகங்கை-5
வேலூர்-5
நீலகிரி-4
கள்ளக்குறிச்சி-2
ராமநாதபுரம்-2
அரியலூர்-1
பெரம்பலூர்-1

தலைப்புச்செய்திகள்