Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கொரோனா சிகிச்சைக்காக தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தை பயன்படுத்தலாம்: விஜயகாந்த்

ஏப்ரல் 08, 2020 07:26

சென்னை: கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தை தமிழக அரசு பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது;  கொரோனாவுக்கு எதிராக மத்திய-, மாநில அரசுகள் எடுத்து வரும் நடவடிக்கைக்கு தே.மு.தி.க. ஆதரவு தெரிவித்து வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் ஆண்டாள் அழகர் என்ஜினீயரிங் கல்லூரியையும், சென்னையில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தையும் தமிழக அரசு பயன்படுத்தி கொள்ளவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அந்தந்த வார்டுகளில் வசிக்கும் தே.மு.தி.க. நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் அத்தியாவசிய பொருட்களான உணவு, காய்கறி, உடை, மருந்து, முக கவசம் உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்க வேண்டும். ஊரடங்கு உத்தரவால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள ஆட்டோ, ஷேர் ஆட்டோ டிரைவர்களின் குடும்பத்தினருக்கும் மற்றும் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் தினக்கூலி தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கும் தங்களால் இயன்ற உதவிகளை செய்யவேண்டும். இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

தலைப்புச்செய்திகள்