Sunday, 7th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சங்கரன்கோவிலில் பொருட்களை அதிக விலைக்கு விற்று மக்கள் வயிற்றில் அடித்த கடைக்கு ‘சீல்’

ஏப்ரல் 08, 2020 10:59

சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாக துறை அதிகாரிகள் கடைகளில் நடத்திய திடீர் ஆய்வில் அத்தியாவசிய பொருட்களான காய்கறி, மளிகை உள்ளிட்ட பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டதால் அபராதம் விதிக்கப்பட்டதுடன் விலைப்பட்டியல் ஒட்டவில்ைல என்றால் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என்றும் எச்சரித்தனர்.

தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு மட்டும் மக்கள் வீட்டை விட்டு வெளியே வருகின்றனர். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் உள்ள அத்தியாவசிய பொருட்களான காய்கறி, மளிகை உள்ளிட்ட பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு புகார் கிடைத்துள்ளது.

அதன் பேரில் உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமண அலுவலர் ஜெகதீஷ் சந்திர போஸ் தலைமையிலான அதிகாரிகள், சங்கரன்கோவிலுக்கு ஆய்வுக்கு வந்தனர். அப்போது அங்கு மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் இருந்ததை கண்டு கடுமையாக கடிந்தனர். பின்பு திடீரென கடைக்குள் சென்று ஆய்வில் ஈடுபட்ட அதிகாரிகள் அங்கு தடை செய்யப்பட்ட புகையிலை, குட்கா, பான்மசாலா மற்றும் பிளாஸ்டிக் பாலீத்தீன் பைகள் ஆகியவற்றை பறிமுதல் செய்து அந்த கடைக்கு ரூபாய் 7,000 அபராதம் விதித்தனர்.

மேலும் இரு கடைகளில் ஆய்வு நடத்தினர். அங்கு பிளாஸ்டிக் பைகள் மட்டுமே இருந்ததால் தலா 2,000 ரூபாய் அபராதம் விதித்தனர். மேலும் விற்பனை செய்யப்படும் பொருட்களின் விலைப்பட்டியல் ஒட்ட வேண்டும் என்று கூறிய அதிகாரிகள் அப்படி ஒட்டவில்லை என்றால் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என்றும் எச்சரித்தனர்.

தலைப்புச்செய்திகள்