Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ரஜினி - அமிதாப் நடித்த குறும்படம் மூலம் ஒரு லட்சம் தொழிலாளர்களுக்கு நிவாரணம்

ஏப்ரல் 09, 2020 11:57

சென்னை: ரஜினி அமிதாப் நடித்த குறும்படத்தின் மூலம் ஒரு லட்சம் தொழிலாளர்களுக்கு உதவ முடிவு செய்துள்ளனர்.

ஊரடங்கு காலத்தில் வீட்டில் பாதுகாப்பாக இருப்பது உடல்நலனைப் பேணுவது வீட்டிலிருந்து பணிபுரிவது சமூக விலகல் உள்ளிட்ட விஷயங்களை வலியுறுத்தும் விதமாக பேமிலி என்ற குறும்படம் வெளியானது.

இதில் நடிகர்கள் அமிதாப் பச்சன், ரஜினிகாந்த், சிரஞ்சீவி, பிரியங்கா சோப்ரா, ரன்பீர் கபூ,ர் ஆலியா பட் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடித்து இருந்தனர். இந்த படத்தின் மூலம் கிடைக்கும் பணம் அனைத்தையுமே தினசரித் தொழிலாளர்களுக்கு உதவ முடிவு செய்துள்ளனர்.

இது தொடர்பாக சிரஞ்சீவி தனது டுவிட்டர் பதிவில் அமிதாப்பின் அற்புதமான இந்த முன்னெடுப்பில் பங்கெடுப்பதில் மிக்க மகிழ்ச்சி. இதிலிருந்து வரும் வருமானம் இந்தியத் திரைத்துறையில் இருக்கும் ஒரு லட்சம் தினக்கூலிப் பணியாளர்களுக்கு நிவாரணம் தரும் இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
 

தலைப்புச்செய்திகள்