Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

புனித வெள்ளி: கிறிஸ்தவ மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

ஏப்ரல் 10, 2020 06:26

உலகம் முழுவதும் கிறிஸ்துவர்கள் இன்று புனித வெள்ளி தினத்தை கொண்டாடுகின்றனர். இயேசு சிலுவையில் அறையப்பட்ட நாள் புனித வெள்ளியாக ஆண்டுதோறும் அனுசரிக்கப்படுகிறது.

பிரதமர் மோடி கிறிஸ்தவ மக்களுக்கு தனது வாழ்த்துக்களை டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

அதில், 'இயேசு மற்றவர்களுக்கு சேவை செய்வதற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார். அவரது தைரியமும் நேர்மையும் தனித்து நிற்கின்றன. அவரது நீதி உணர்வும் அவ்வாறே இருக்கிறது. இந்த புனித வெள்ளியன்று, இயேசு கிறிஸ்துவையும், உண்மை, சேவை, நீதிக்கான அவரது அர்ப்பணிப்பையும் நினைவு கொள்வோம்.' என கூறியுள்ளார்.

தலைப்புச்செய்திகள்