Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கொரோனா மட்டும் வரலேனா இந்நேரம் மாஸ்டர் ரிலீசாகியிருக்கும்: இயக்குனர் வேதனை

ஏப்ரல் 10, 2020 06:52

சென்னை: கொரோனா மட்டும் வரலேனா இந்நேரம் மாஸ்டர் ரிலீசாகிருக்கும் என பிரபல இயக்குனர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

விஜய்யின் 64 வது படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனனும் வில்லனாக விஜய் சேதுபதியும் நடித்துள்ளார். மேலும் சாந்தனு, ஆண்ட்ரியா, கவுரி கிஷான், அர்ஜுன் தாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் வருகின்றனர்.
சேவியர் பிரிட்டோ தயாரித்திருக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

மாஸ்டர் படத்தை ஏப்ரல் 9-ந் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்தது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் மாஸ்டர் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போய் உள்ளது.

இந்நிலையில் ஆடை படத்தின் இயக்குனரும் மாஸ்டர் படத்தின் வசனகர்த்தாவுமான ரத்னகுமார் இதுகுறித்து டுவிட்டரில்
பதிவிட்டுள்ளதாவது்;

கொரோனா மட்டும் வரலேனா இந்நேரம் மாஸ்டர் ரிலீசாகி இருக்கும். முதலில் டெல்லியில் ஏற்பட்ட காற்று மாசு காரணமாக படப்பிடிப்புக்கு சிக்கல் பின்னர் போராட்டம் அதையடுத்து ஐடி ரெய்டு தற்போது கொரோனா. ஒரு ரசிகனாக இது மிகவும் வருத்தமாக உள்ளது என பதிவிட்டுள்ளார்.

தலைப்புச்செய்திகள்