Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தப்லிக் மாநாட்டில் பங்கேற்றதை மறைத்த காங்கிரஸ் தலைவருக்கு குடும்பத்துடன் கொரோனா பாதிப்பு

ஏப்ரல் 11, 2020 05:38

டெல்லி மாநாட்டில் பங்கேற்றதை மறைத்த காங்., கட்சியின் முன்னாள் கவுன்சிலருக்கும், அவரது குடும்பத்துக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

டெல்லியில் நடந்த தப்லிக் - இ - ஜமாத் மாநாட்டில் பங்கேற்ற பலருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து நாடு முழுவதும் உஷார் படுத்தப்பட்டு மாநாட்டில் பங்கேற்றவர்கள் அடையாளம் காணப்பட்டு தனிமைப்படுத்தும் முயற்சியில் மத்திய மாநில அரசுகள் இறங்கின. மாநாட்டில் பங்கேற்றவர்கள் தசமாக முன்வந்து பரிசோதனை செய்யும்படியும் அறிவுறுத்தப்பட்டது.

இந்நிலையில், மாநாட்டில் கலந்து கொண்டதை மறைத்த காங்., முன்னாள் கவுன்சிலருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. டில்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் குறித்து விசாரித்த போது போலீசாரிடம் அவர் உண்மையை மறைத்துள்ளார். தற்போது அதிக காய்ச்சல் உள்ளிட்ட கொரோனா அறிகுறிகள் தென்பட்டதையடுத்து அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவருக்கு கொரோனா தொற்று இருப்பதை உறுதி செய்தனர்.

அவரது மனைவி மற்றும் மகளுக்கு நடத்தப்பட்ட சோதனையில், அவர்களுக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும், அம்பேத்கர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து டில்லியில் உள்ள தீன்பூர் பகுதி முழுவதும் சீல் வைக்கப்பட்டுள்ளது. அவர் வசித்த பகுதியில் இருந்த 25 வீடுகளும் தனிமைப்படுத்தப்பட்டு, அங்குள்ளவர்களுக்கு பரிசோதனை நடைபெறுகின்றது.

தொழில்நுட்ப அடிப்படையில் டில்லி போலீசார் இவருக்கு கொரோனா இருப்பதை கண்டுபிடித்துள்ளனர். கொரோனா பாதித்துள்ள 22 இடங்களை அடையாளம் கண்டுள்ள போலீசார், அவர்களின் தொடர்புகளை கண்டறிய 10 ஆயிரம் மொபைல்களை டிரேஸ் செய்துள்ளனர்.


 

தலைப்புச்செய்திகள்