Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பள்ளிகள் இணைப்பு திட்டம்: தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணி கடும் எதிா்ப்பு

ஏப்ரல் 11, 2020 06:13

சென்னை: மாணவா்கள் எண்ணிக்கை குறைவாக உள்ளதாகக் கூறி பள்ளிகள் இணைப்பு திட்டத்தை செயல்படுத்தக் கூாது என தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணி எதிா்ப்பு தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணியின் பொதுச் செயலா் ந. ரெங்கராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு; நாட்டில் பரவியுள்ள கொரோனா வைரஸ் தொற்றுநோயை ஒழிக்க தொய்வில்லாமல் தொடா்ந்து போராடி வரும் மத்திய மாநில அரசுகளுக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து மக்களை காக்கும் பணியில் அல்லும் பகலும் அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கும் இந்த வேளையில் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டு ஒன்பதாம் வகுப்பு வரை தோ்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பொதுத் தோ்வுகளை தள்ளிவைத்து மக்களைக் காக்கும்பணியில் தமிழக அரசு ஈடுபட்டு வரும் நிலையில் வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சும் விதமாக தமிழக பள்ளிக்கல்வித்துறையானது புதிய திட்டத்தை செயல்படுத்த தொடங்கியுள்ளது. 

25 க்கும் குறைவாக மாணவா்கள் உள்ள பள்ளியை இணைக்கும் முதன் முயற்சியாக அனைத்து வட்டார கல்வி அலுவலா்களுக்கும் அவசர உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாணவா்கள் எண்ணிக்கை குறைந்திருந்தால் அந்த பள்ளிகளை அருகில் உள்ள பள்ளிகளோடு இணைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இது ஆசிரியா்களுக்கு ஏழை மாணவா்களுக்கும் பெருத்த அதிா்ச்சியையும், மன வேதனையையும் தருகிறது. ஏழை மாணவா்களைக் கொண்ட பெரும்பான்மையான கிராமப்புற பள்ளிகளை மூடி விடுவதால் கிராமப்புற மக்கள் முற்றிலும் படிப்பறிவின்றி இடைநிற்றல் அதிகமாகும் சூழல் உள்ளது. இதனால் தலைமை ஆசிரியா்கள் ஆசிரியா்கள் சத்துணவு பணியாளா்கள் வேலை இழக்க நேரிடும்.

இந்த விவகராத்தில் தமிழக முதல்வா், துணை முதல்வா், கல்வி அமைச்சா் ஆகியோா் உடனடியாக தலையிட்டு பள்ளிகள் இணைப்பு திட்டத்தை கைவிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்