Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அமெரிக்கா சென்று திரும்பிய நாகை டாக்டருக்கு கொரோனா

ஏப்ரல் 11, 2020 06:19

நாகை: நாகையில் டாக்டர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. தனது மகளை பார்ப்பதற்காக அமெரிக்கா சென்ற அவர் 15 நாட்களுக்கு முன்பு நாகை திரும்பி உள்ளார்.

நாகை மாவட்டத்தில் 11 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டு இருந்தது. இவர்கள் நாகை, நாகூர், பொரவச்சேரி, திட்டச்சேரி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள் ஆவர். இதையடுத்து அவர்கள் வசிக்கும் பகுதிகள் ‘சீல்’ வைக்கப்பட்டு வெளி ஆட்கள் வருவதற்கும் அந்த பகுதிகளை சேர்ந்தவர்கள் வெளியிடங்களுக்கு செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நாகையில் டாக்டர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. தனது மகளை பார்ப்பதற்காக அமெரிக்கா சென்ற அவர் 15 நாட்களுக்கு முன்பு நாகை திரும்பி உள்ளார். தொடர்ந்து அவருக்கு தொண்டை கரகரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு அவர் நாகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருடைய ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு திருவாரூரில் உள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொரோனா பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. பரிசோதனை முடிவில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதை தொடர்ந்து நாகை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.

டாக்டர் பணியாற்றிய கிளினிக்கில் கிருமி நாசினி தெளிக்கும் பணி நடந்தது. நாகையில் மக்கள் நடமாட்டத்தை போலீசார் டிரோன் மூலமாக கண்காணித்து வருகிறார்கள். அதேபோல் துப்புரவு பணி முழு வீச்சல் நடந்து வருகிறது.

தலைப்புச்செய்திகள்