Saturday, 28th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

காரில் மருத்துவம் அவசரம் என ஸ்டிக்கர் ஒட்டி கள்ளக்காதலி வீட்டுக்கு வந்தவரால் பரபரப்பு

ஏப்ரல் 11, 2020 06:31

நாகை: வேதாரண்யம் தாலுகா தலைஞாயிறில் காரில் மருத்துவம் அவசரம் என ஸ்டிக்கர் ஒட்டி கள்ளக்காதலி வீட்டுக்கு வந்தவர் அங்கேயே தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார்.

வேதாரண்யம் தாலுகா தலைஞாயிறு அக்ரஹாரம் பகுதியில் வசிப்பவர் அமுதா (37). தனது கனவரை பிரிந்த அமுதா மலேசியா நாட்டிற்கு உணவகத்திற்கு வேலைக்கு சென்றார். அங்கு ராமநாதபுரத்தை சேர்ந்த அப்துல் அகமது மைதீன் (57) என்பவருடன் பழக்கம் ஏப்பட்டது. இதனால் அப்துல் அகமது மைதீன் மனைவி அவரை விட்டு பிரிந்து சென்று விட்டார்.

இதற்கிடையே அமுதா மலேசியாவில் இருந்து வந்து தலைஞாயிறில் தனது வீட்டில் தங்கி உள்ளார். இந்த நிலையில் அமுதாவை பார்க்க ராமநாதபுரத்தில் இருந்து அப்துல் அகமது மைதீன் சொகுசு காரில் மருத்துவம் அவசரம் என ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டு வீட்டில் வந்து தங்கி உள்ளார்.

தகவல் அறிந்த சுகாதரத்துறையினர் மற்றும் போலீசார் சென்று வீட்டில் சோதனை செய்தனர். பின்னர் அந்த வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட ஸ்டிக்கர் ஒட்டப்பட்டன. வீட்டில் இருந்த அமுதா அப்துல் அகமது மைதீன் மற்றும் அமுதாவின் மகன், மகள் ஆகிய 4 பேர் தனிமைப்படுத்தப்பட்டு வீட்டில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளனர்.

அப்துல் அகமது மைதீன் ராமநாதபுரத்தில் இருந்து வந்ததால் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது என போலீசார் தெரிவித்தனர். 4 பேரும் வீட்டை விட்டு வெளியே வராமல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
 

தலைப்புச்செய்திகள்