Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மாமிச உணவை தவிர்ப்பதன் மூலம் கொரோனா போன்ற கொடிய நோய்கள் வராமல் தடுக்கலாம்: மதுரை ஆதீனம்

ஏப்ரல் 11, 2020 12:40

மதுரை: கொரோனாவை விரட்ட மாமிச உணவுகளை தவிர்த்து காய்கனி, கீரை, தானியங்கள் போன்ற உணவுகளை சாப்பிட வேண்டும் என்று மதுரை ஆதீனம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- பிராணிகளைக் கொன்று அதன் மாமிசத்தை உண்பது பல்வேறு நோய்களுக்கு காரணமாக உள்ளது. எத்தனை பூஜைகள் செய்தாலும், கோவில்களுக்குச் சென்று வழிபட்டாலும், யாகங்கள், ஹோமங்கள் நடத்தினாலும் மாமிச உணவுகளை தவிர்க்காத வரை எந்த பலனும் கிடைக்காது.

இதை 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே திருவள்ளுவர் கொல்லாமை, புலால் உண்ணாமை ஆகிய குறள்கள் வாயிலாக வலியுறுத்தி உள்ளார். உலகில் எந்த கடவுளும் மாமிசத்தை படைத்து வழிபட வேண்டும் என்று கூறவில்லை. மனிதனின் விருப்பம் மற்றும் ருசிக்காக கடவுளை காரணமாக கூறக்கூடாது. ஒரு பிராணியின் உயிரை எடுக்க எந்த ஒரு மனிதருக்கும் உரிமை இல்லை.

மேலும் மாமிச உணவுகள் மூலம் கொரோனா போன்ற கொடிய நோய்கள் பரவுவதை தவிர்க்கவும், நோயின்றி வாழவும் உலகில் உள்ள மனித சமூகம் மாமிச உணவுகளை தவிர்த்து காய்கனி, கீரை, தானியங்கள் போன்ற சாத்வீக உணவுகளை உண்ணும் பழக்கத்துக்கு மாற வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்