Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பான் மசாலாவை சுவைத்து துப்பினால் நடவடிக்கை

ஏப்ரல் 12, 2020 06:37

'புகையிலை பொருட்களை சுவைத்து, பொது இடங்களில் துப்பினால், கொரோனா வைரஸ் பரவும் வேகம் அதிகரிக்கும். இதுபோன்ற செயலில் ஈடுபடுவோர் மீது, தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, மாநில அரசுகளுக்கு, மத்திய சுகாதாரத்துறை பரிந்துரை செய்துள்ளது.

கொரோனா வைரஸ் தாக்குதல் அதிகரித்து வரும் நிலையில், அதை தடுக்க, மத்திய, மாநில சுகாதாரத் துறையினர், பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன்படி, பொதுமக்கள் புகையிலை பொருட்களை சுவைத்து, பொது இடங்களில் துப்புவதை தடுக்க, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மத்திய சுகாதாரத் துறை கடிதம் அனுப்பியுள்ளது.

அதில், கூறப்பட்டு உள்ளதாவது: புகையிலை பொருட்களான, பான் மசாலா, சுபாரி உள்ளிட்டவற்றை பொதுமக்கள் சுவைத்தால், எச்சில் அதிகம் சுரக்கும் என்பதால், அதைத் துப்ப வேண்டும் என தோன்றும். பொது இடங்களில் எச்சில் துப்புவது, வைரஸ் பரவும் வேகத்தை அதிகரிக்கும். இது போன்ற அத்துமீற லில் ஈடுபடுவோர் மீது, பேரிடர் மேலாண்மை சட்டம் மற்றும் இந்திய தண்டனை சட்டம், 1860 மற்றும் குற்றவியல் நடைமுறை சட்டம் ஆகியவற்றின் கீழ், நடவடிக்கை எடுக்கலாம். வைரஸ் பரவல் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு, புகையிலை பொருட்களை சுவைத்து, பொது இடங்களில் துப்பக்கூடாது என, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கூறியுள்ளது. இவ்வாறு, அதில் கூறப்பட்டு உள்ளது.

பீஹார், ஜார்க்கண்ட், தெலுங்கானா, உத்தர பிரதேசம், உத்தரகண்ட், மஹாராஷ்டிரா, ஹரியானா, நாகாலாந்து, அசாம் போன்ற மாநிலங்கள், கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, புகையிலை பொருட்கள் பயன்பாடு மற்றும் பொது இடங்களில் துப்புவதற்கு, ஏற்கனவே தடை விதித்து உள்ளன.

தலைப்புச்செய்திகள்