Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மூன்றரை வயது குழந்தைக்காக மும்பைக்கு ராஜஸ்தானிலிருந்து சரக்கு ரயிலில் வந்த ஒட்டக பால்

ஏப்ரல் 12, 2020 07:38

மும்பை: ஆட்டிசம் பாதித்த மூன்றரை வயது குழந்தைக்காக ராஜஸ்தானிலிருந்து சரக்கு ரயில் மூலம் வந்த ஒட்டக பால் மும்பையில் டெலிவரி செய்யப்பட்டது.

மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையைச் சேர்ந்தவர் நெஹா ரேணு குமாரி, இவரது மூன்றரை வயது குழந்தை ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டதால், குழந்தைக்கு ஒட்டகபாலை கொடுத்து வந்துள்ளார்.கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை காரணமாக நாடுமுழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளதால் போதிய அளவு ஒட்டக பால் கிடைக்கவில்லை. உடன் நெஹா குமாரி டுவிட்டர் மூலம் பிரதமர் மோடிக்கு கடந்த எப். 4-ம் தேதி கோரிக்கை வைத்தார்.

அவரது டுவிட்டர் பதிவை ஒடிசா ஐ.பி.எஸ்., அதிகாரி அருண்போத்ரா, வட மேற்கு ரயில்வே மண்டல நிர்வாக அதிகாரி தருண்ஜெயின் இருவரும் பகிர்ந்தனர்.உடன் தருண் ஜெயின் முயற்சியால், பஞ்சாப் மாநிலம் லுதியானாவிலிருந்து புறப்பட்டு ராஜஸ்தான் வழியாக மஹாராஷ்டிராவின் பந்த்ரா சென்றடையும் சரக்கு ரயில் மூலம் 20 லிட்டர் ஒட்டகபால் அனுப்பி வைக்கப்பட்டு நேற்று இரவு மும்பை பந்த்ரா ரயில் நிலையம் வந்தது. பின்னர் செம்பூரில் உள்ள நெஹா ரேணுகுமாரி வீட்டிற்கே ஒட்டகபால் டெலிவரி செய்யப்பட்டது.

ரயில்வேயின் தன்னலமிக்க சேவையை மத்திய அமைச்சர் பியூஷ் கோயில் டுவிட்டரில் பாராட்டியுள்ளார்.

தலைப்புச்செய்திகள்