Sunday, 29th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கொரோனா பாதித்தவர்களை தனிமைப்படுத்த 5000 ரயில் பெட்டிகள் தயார்

ஏப்ரல் 12, 2020 07:41

கொரோனா பாதிப்பின் காரணமாக, ஊரடங்கு அமலில் உள்ளதால், நாடு முழுவதும், ரயில்கள் இயக்கப்படவில்லை.

இதற்கிடையே, கொரோனாவால், தனிமையில் வைக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால், ரயில் பெட்டிகளை, தனிமை வார்டுகளாக மாற்ற ரயில்வே நிர்வாகம் முடிவு செய்தது இதன்படி ரயில்பெட்டிகள் மருத்துவ வசதிகளுடன் கூடிய தனிமை பெட்டிகளாக மாற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் நாடு முழுவதும் 20 ஆயிரம் தனிமை ரயில் பெட்டிகளாக மாற்ற திட்டமிட்டப்பட்டிருந்த நிலையில், தற்போது 80 ஆயிரம் படுக்கைகள் கொண்ட 5 ஆயிரம் தனிமை பெட்டிகள் தயார்ப்படுத்தப்பட்டு அவற்றை கிராமப்புறங்களில் பயன்படுத்த அரசின் உத்தரவிற்காக காத்திருப்பதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தலைப்புச்செய்திகள்