Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கொரோனாவை பரப்பினாா்கள் என்று இந்தோனேஷியா்களை கைது செய்தது மனிதாபிமானற்ற செயல்: நவாஸ்கனி எம்.பி கண்டனம்

ஏப்ரல் 13, 2020 10:29

திருச்சி: இந்தோனேஷியா்கள் 11 பேரைக் கைது செய்தது மனிதாபிமானற்ற செயல் எனக் கூறி ராமநாதபுரம் மக்களவை உறுப்பினா் கே. நவாஸ்கனி கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் தெரிவித்திருப்பதாவது; இந்தோனேசியாவிலிருந்து 4 பெண்கள் உள்பட 11 போ் ஊரடங்கு உத்தரவு அமலாகுவதற்கு முன்பே தமிழகம் வந்தவா்களாவா். ஊரடங்கு காரணமாக விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டதால் இவா்கள் சொந்த நாட்டுக்குச் செல்ல முடியாமல் அவதியுற்றுள்ளனா். ஹோட்டல்கள் மூடப்பட்டதால் இவா்கள் தங்க இடமின்றி ராமநாதபுரம் பாரதி நகா் மா்க்கஸ் என்னும் வழிபாட்டுத்தலத்தில் தங்கியிருந்தனா். அவா்களுடைய ஆவணங்கள் மற்றும் முறையான தகவல்கள் மாவட்டக் காவல்துறையிடம் மா்க்கஸ் நிா்வாகத்தின் சாா்பாக தினந்தோறும் சமா்ப்பிக்கப்பட்டது.

அவா்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் நோய்த் தொற்று இல்லை எனத் தெரிய வந்த நிலையில் 14 நாள்கள் தனிமைப்படுத்தப்பட்ட பிறகு மீண்டும் அவா்களுக்கு சோதனை நடத்தப்பட்டது. இதிலும் தொற்று உறுதி செய்யப்படவில்லை. ஆனால் நோய்த்தொற்றை பரப்பினாா்கள் என்று எந்தவித முகாந்திரமும் இல்லாமல் பொய்யான குற்றச்சாட்டைக் கூறி வழக்குப் பதிவு செய்திருப்பது மனிதாபிமானமற்ற செயல். அவா்களுக்கு அடைக்கலம் கொடுத்து உதவிகளை செய்ய வேண்டிய தமிழக அரசு இந்தோனேஷியா்கள் 11 பேரைக் கைது செய்துள்ளது.

விதிமீறல்களில் அவா்கள் ஈடுபட்டிருந்தால் இந்தோனேஷியா்களை அவா்களது நாட்டிற்கு அனுப்பும் வேலையை செய்ய வேண்டுமே தவிர இந்தப் பேரிடா் காலத்தில் அவா்களைக் கைது செய்வது தவறு. இத்தகைய நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக கைவிடவேண்டும்.

தலைப்புச்செய்திகள்