Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கொரோனா வைரஸ் வேகமாக பரவும் சூழலில் மத அரசியல் செய்வது கண்டனத்திற்குரியது: பொன். ராதாகிருஷ்ணன்

ஏப்ரல் 13, 2020 02:27

நாகர்கோவில்: கொரோனா வைரஸ் வேகமாக பரவும் நிலையில் மத அரசியல் செய்வது கண்டனத்திற்குரியது என்று பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

முன்னாள் மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறி இருப்பதாவது:- உலகை உலுக்கி கொண்டிருக்கும் கொரோனா வைரசில் இருந்து நமது நாட்டை காப்பாற்ற வேண்டும். மக்களை காப்பாற்ற வேண்டும் என்ற பெரும் முயற்சியில் பிரதமர் மோடியும், தமிழக அரசும் இணைந்து பணி புரிந்து செயல்பட்டு கொண்டிருக்கிறது.

நாம் அரசு சொல்லிக்கின்றவற்றை கடைபிடிப்பது நமது கடமையாகும். கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டால் பாதிக்கப்பட்டவர் மட்டுமின்றி அவரது குடும்பத்தை சேர்ந்தவர்கள் அனைவரும் பாதிக்கப்படுகிறார்கள். அது மட்டுமின்றி அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள், அந்த ஊரைச் சேர்ந்தவர்கள் கூட பாதிக்கப்படும் சூழல் ஏற்படும். அமெரிக்கா போன்ற நாடுகளில் கொத்து கொத்தாக ஏராளமானோர் பலியாகி வருவதை பார்த்து வருகிறோம். எனவே நம்மை நாமே பாதுகாத்து கொள்வது அவசியமாகும். நமது பகுதியில் அரசாங்கம் எடுக்கின்ற ஒவ்வொரு அனைத்து முயற்சிகளுக்கும் நாம் துணையாக நிற்க வேண்டும்.

அரசியல் கட்சிக்கோ, ஆளும் கட்சிக்கோ, எதிர்கட்சிக்கோ அரசுக்கு சம்பந்தப்பட்ட வி‌ஷயம் அல்ல. நம்மைநாமே காத்துக் கொள்வதற்காக நாம் எடுக்கும் முயற்சியாகும். கொரோனா வைரசை அரசியலாக்கக்கூடாது. கொரோனா வைரசில் இருந்து நம்மை பாதுகாத்து கொண்ட பிறகு அரசியலை வைத்துக் கொள்ளலாம். கொரோனா வேகமாக பரவும் நிலையில் மத அரசியல் செய்வது கண்டனத்திற்குரியது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறி உள்ளார்.


 

தலைப்புச்செய்திகள்