Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சாலையில் கொட்டிய பாலை நாய்களுடன் மனிதனும் பகிர்ந்து கொண்ட பரிதாபம்

ஏப்ரல் 14, 2020 05:58

உ.பி.யில் சாலையில் வீணாக கொட்டிய பாலை தெரு நாய்கள் குடிப்பதும், அந்த வழியாக வந்த ஒரு நபர் சிறிய பானையில் பாலை அள்ளி எடுக்கும் வீடியோ காட்சி பரிதாபமாக இருந்தது.

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையால் நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. வரும் ஏப்.30ம் தேதி வரையும் நீட்டிக்கப்பட உள்ளது.
இந்நிலையில், உ.பி. மாநிலம் ஆக்ரா அருகே ராம் பாஹ் சவுரஹா என்ற ஊரில் சாலையில் சிலர் பாலை வீணாக கொட்டிவிட்டு சென்றனர்.வாகன போக்குவரத்து இல்லை என்பதால் சாலையில் ஆறாக ஓடிய பாலை கண்டவுடன் அங்கு சுற்றித்திரிந்த தெரு நாய்கள் சில சிந்திக்கிடந்த பாலை ருசித்து பசியாற்றின.

உடனே அந்த வழியாக வந்த ஒருநபர் தானும் பசியாற்ற குப்பையில் கிடந்த சிறிய மண்பானைய எடுத்து வந்து சிந்திக்கிடந்த பாலை கைகளால் அள்ளி பானையில் ஊற்றும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

நாடு முழுவதும் ஊரடங்கால் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், ஏழை எளிய மக்களுக்கு உணவு மானியங்களை மத்திய அரசு அறிவித்துள்ளது என்றாலும், இது போன்ற காட்சி நாட்டில் வறுமை இன்னும் ஒழியவில்லை. ஊரடங்கால் இது மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது.

தலைப்புச்செய்திகள்