Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கொரோனா ‘ஹாட்ஸ்பாட்’: தமிழகத்தில் 10 மாவட்டங்கள் தீவிர கண்காணிப்பு

ஏப்ரல் 14, 2020 12:04

சென்னை: இந்தியாவில் ஹாட்ஸ்பாட் பகுதிகளில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரமாக இருக்கும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். தமிழகத்தில் முக்கியமான 10 மாவட்டங்கள் ஹாட்ஸ்பாட் மாவட்டங்கள் என்று அழைக்கப்படுகிறது.

இந்தியா முழுவதும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் ஹாட்ஸ்பாட்களில் அதிகளவில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஹாட்ஸ்பாட் பகுதிகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். அங்குதான் கொரோனா தீவிரமாக பார்வை வருகிறது. இதை கட்டுப்படுத்த வேண்டும். இல்லையென்றால் புதிதாக ஹாட்ஸ்பாட் பகுதிகள் உருவாகும். இதை தடுப்பதுதான் எங்கள் நோக்கம், என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

பொதுவாக ஒரு குறிப்பிட்ட பகுதியில் தீவிரமாக கொரோனா பரவினால் அதை ஹாட்ஸ்பாட் என்று அழைப்பார்கள். ஒரு குறிப்பிட்ட பகுதியில் ஒருவருக்கு கொரோனா ஏற்பட்டு, அவரின் மூலம் வேறு சிலருக்கு கொரோனா பரவி அங்கிருந்து வேகமாக வேறு சிலருக்கும் கொரோனா பரவி பலருக்கு கொரோனா ஏற்பட்டால் அதை ஹாட்ஸ்பாட்கள் என்று கூறுவார்கள். இந்த பகுதிகளில் முதல் நாள் 10 பேருக்கு கொரோனா இருந்தால் இரண்டாவது நாள் 20 பேருக்கு கொரோனா ஏற்படும்.

பொதுவாக ஹாட்ஸ்பாட் பகுதிகளில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை தினமும் இரட்டிப்பாக வளரும். உதாரணமாக கேரளாவில் இருக்கும் காசர்கோடு பகுதி ஹாட்ஸ்பாட் பகுதியாகும். காசர்கோடு பகுதியில் 166 பேருக்கு கொரோனா உள்ளது. அங்கு ஒரே வாரத்தில் தினமும் 15 என்ற எண்ணிக்கையில் சராசரியாக கொரோனா ஏற்பட்டது. இதனால் காசர்கோடு ஹாட்ஸ்பாட் பகுதி என்று அழைக்கப்படுகிறது.

இந்தியாவில் மொத்தம் 350க்கும் அதிகமான மாவட்டங்கள் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதில், இந்தியா முழுக்க 60க்கும் அதிகமான மாவட்டங்கள் ஹாட்ஸ்பாட் மாவட்டங்கள் என்று அழைக்கப்பட்டு இருக்கிறது. தமிழகத்தில் இதேபோல் ஹாட்ஸ்பாட் பகுதிகள் உள்ளது. தமிழகத்தில் சென்னை, திருப்பூர், ஈரோடு, கோயம்புத்தூர், திருநெல்வேலி, திண்டுக்கல், நாமக்கல் , செங்கல்பட்டு, திருச்சி, தேனி ஆகிய மாவட்டங்கள் ஹாட்ஸ்பாட் பகுதிகள் ஆகும்.

பொதுவாக இந்த ஹாட்ஸ்பாட் பகுதிகளில் கொரோனாவை கட்டுப்படுத்துவது கடினம். மிக கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டால் மட்டுமே இங்கு கொரோனாவை கட்டுப்படுத்த முடியும். இதனால்தான் ஹாட்ஸ்பாட் பகுதிகளில் அதிக கட்டுப்பாடுகளை விதிப்போம், தீவிரமாக கண்காணிப்போம் என்று பிரதமர் மோடி தெரிவித்து இருக்கிறார்.

தலைப்புச்செய்திகள்