Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அரசு அலுவலகங்களில் ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி படங்கள் அகற்றப்பட்டன

மார்ச் 11, 2019 05:25

சென்னை: பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அரசு அலுவலகங்களில் இருந்து ஜெயலலிதா மற்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி படங்கள் அகற்றப்பட்டன. பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்தன. 

இதன் காரணமாக நேற்று மாலை 5 மணிக்கே, மத்திய- மாநில அமைச்சர்கள் தாங்கள் பயன்படுத்தி வந்த அரசு கார்களை திருப்பி ஒப்படைத்தனர். அமைச்சர்கள் காமராஜ், விஜயபாஸ்கர் ஆகியோர் நேற்று மாலை திருச்சியில் இருந்த விமானத்தில் சென்னைக்கு வந்தனர். 

அவர்களை அழைத்துச் செல்வதற்காக சுழல் விளக்குகள் பொருத்தப்பட்டிருந்த அரசு கார்கள் விமான நிலையத்துக்கு வந்திருந்தன. 

இந்த கார்களை பயன்படுத்தாமல் அமைச்சர்கள் திருப்பி அனுப்பினர். அ.தி.மு.க. கொள்கை பரப்பு துணை செயலாளரான வைகை செல்வனும், அதே விமானத்தில் சென்னை திரும்பி இருந்தார். அவரது காரில் ஏறி அமைச்சர்கள் இருவரும் புறப்பட்டு சென்றனர். 

தலைமை செயலகம் உள்ளிட்ட மாநில அரசு அலுவலகங்களில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் போட்டோக்களும் உடனடியாக அகற்றப்பட்டன. கலெக்டர் அலுவலகங்கள் மற்றும் தாலுகா அலுவலகங்களில் இருந்தும் இருவரது போட்டோக்களும் அகற்றப்பட்டன. 

தலைப்புச்செய்திகள்