Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ரயில் சேவை இருப்பதாக வதந்தியை பரப்பியவர்கள் மீது கடும் நடவடிக்கை

ஏப்ரல் 15, 2020 06:25

மும்பை: மும்பையில் ரயில் சேவை இருப்பதாக வதந்தியை பரப்பியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அம்மாநில அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மும்பையில் நேற்று மாலை பந்த்ரா ரயில் நிலையத்தில் ரயில் சேவை இயக்கப்படுவதாக சிலர் வதந்தியை பரப்பியுள்ளதாக புகார் எழுந்தது. இதனை நம்பி வெளி மாநில தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்லும் ஆவலில் ஒரே நேரத்தில் ரயில் நிலையம் முன் குவியத்து வங்கினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.போலீசார் தடியடி நடத்தினர்.

இது குறித்து பந்த்ரா போலீசார் விசாரணை நடத்தி 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். மஹாராஷ்டிரா உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் கூறியதாவது, வதந்தியை கிளப்பியது யார் என்பது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. குற்றவாளிகள் யாரும் தண்டனையிலிருந்து தப்பமுடியாது. என்றார்.

தலைப்புச்செய்திகள்