Wednesday, 3rd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தமிழகத்தில் ஊரடங்கை மீறி சுற்றிய 1.97 லட்சம் பேர் கைது: 1,56,314 வாகனங்கள் பறிமுதல்

ஏப்ரல் 15, 2020 10:01

சென்னை: தமிழகத்தில் ஊரடங்கை மீறி வெளியே சுற்றிய 1.97 லட்சம் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், அதை பொருட்படுத்தாமல் பலர் வாகனங்களில் வெளியே சுற்றி திரிகின்றனர். இதனால், அவர்களை கட்டுப்படுத்தும் விதமாக போலீசார், கைது நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர். அந்தவகையில் தமிழகத்தில் அத்யாவசிய தேவையின்றி ஊரடங்கு உத்தரவை மீறி வாகனங்களில் வெளியே சுற்றிய 1,97,536 லட்சம் பேர் கைது செய்யப்பட்டு, ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், வெளியே சுற்றியதால் 1,56,314 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அவர்களிடம் இருந்து 82 லட்சத்து 32 ஆயிரத்து 644 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதில் இருந்து விதிகளை மீறியதாக இதுவரை 1,84,748 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என தமிழக போலீசார் தெரிவித்துள்ளனர்.

தலைப்புச்செய்திகள்