Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

75,000 புதிய ஊழியர்களை வேலைக்கு அமர்த்துகிறது அமேசான் நிறுவனம்

ஏப்ரல் 15, 2020 11:15

உலகிலேயே நாங்கள் தான் வல்லரசு என தனது காலரை தூக்கிவிட்டு கொண்ட அமெரிக்கா, இன்று கொரோனாவின் மையமாக உள்ளது. கொரோனா என்னும் கண்ணுக்கு தெரியாத அரக்கனால், மக்கள் இன்று வீடுகளை விட்டு வெளியே வர முடியாத நிலை நிலவி வருகிறது. மேலும் அத்தியாவசிய தேவை தவிர வேறு எதற்காகவும் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரக்கூடாது என அரசு கூறி வருகிறது.

அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகளிலும் ஒட்டுமொத்த துறையும் முடங்கி போனாலும், ஆன்-லைன் மளிகை வியாபாரம் மட்டும் ஓயவில்லை. அந்தளவுக்கு ஆன்-லைன் நிறுவனங்களுக்கு ஆர்டர்கள் குவிந்து வருகின்றன. ஒரு புறம் ஆள் பற்றாக்குறையால் ஆர்டர்களை டெலிவரி செய்ய முடியாமல் தவித்து வரும் இந்த நிறுவனங்கள் புதிய ஆர்டர்களை தவிர்த்து வருகின்றன.

மேலும் தங்களது குடோன்களில் சரக்கு இருப்பும் குறைந்து வருவதால் மற்ற மொத்த வியாபாரிகளிடம் வாங்கி தான் சில இடங்களில் டெலிவரி செய்து வருகின்றன. இதனால் ஆர்டர்களை டெலிவரி செய்வதிலும் தாமதம் ஏற்பட்டு வருகிறது. மேலும் சரியான நேரத்தில் வாடிக்கையாளர்களுக்கு கொடுக்க முடியாமல் தவித்து வருவதாக அமேசான் தெரிவித்துள்ளது.

அதுமட்டும் அல்ல ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட ஆர்டர்களுக்கே இன்னும் டெலிவரி செய்யப்படாத நிலையில், புதிய ஆர்டர்களை தள்ளி வைத்து வருகின்றது. அதிலும் முன்பு இருந்ததை விட தற்போது ஆன்-லைன் ஆர்டர்களும் அதிகரித்துள்ளன. ஆனால், முன்னர் 80 இடங்களில் இருந்து பொருட்களை வாங்கி வந்த நிலையில், தற்போது 150 இடங்களில் வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
]
அமேசான் இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அமேசானில் முன்பு இருந்ததை விட, கொரோனா பரவத் தொடங்கிய இந்த காலத்தில் 60% அதிகமாக ஆர்டர்கள் அதிகரித்துள்ளது. இந்நிலையில் இதனை சமாளிப்பதற்காகத் தான் அமேசான் 75,000 புதிய ஊழியர்களை வேலைக்கு அமர்த்தி வருகிறது’ என அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அதிலும் சமூக விழிப்புணர்வு, போதுமான இடைவெளி ஆகியவற்றை கடைபிடிப்பதை நாங்கள் உறுதி செய்கிறோம். மேலும் எங்கள் வாடிக்கையாளர்கள் முடிந்தால் பாதுகாப்பாக அருகிலுள்ள கடைகளில் பொருட்களை வாங்கிக் கொள்ள ஊக்குவிக்கிறோம் என்றும் தெரிவித்துள்ளது. தற்போது நிலவி வரும் அசாதாரண சூழ்நிலையில், அதிலும் அமெரிக்கா போன்ற நாடுகளில் ஆன்-லைன் டெலிவரி நிறுவனங்களும் மக்கள் வெளியே வருவதை தடுப்பதில் முக்கிய பங்காற்றி வருகின்றன.

தலைப்புச்செய்திகள்