Saturday, 28th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மக்களின் சேவை பணிக்காக மூன்று வாகனங்கள் வழங்கியது இந்து முன்னணி

ஏப்ரல் 15, 2020 03:38

திருப்பூர்: திருப்பூரில் அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்லவும், பால் விநியோகம் செய்வதற்காகவும் மூன்று வாகனங்கள் மக்களின் சேவை பணிக்காக இந்து முன்னணி சார்பில் வழங்கப்பட்டுள்ளது. இதை இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்ததாவது:
கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் தமிழக, மத்திய அரசு சிறப்பாக போர்க்கால அடிப்படையில் பணியாற்றி வருகிறது. பிரதமர், முதல்வர், அமைச்சர்கள், அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் இந்து முன்னணி சார்பில் மனமார்ந்த பாராட்டுக்கள். மேலும் 144 தடை உத்தரவை மே 3ம் தேதி வரை நீட்டிப்பது இத்தகைய சூழலில் வரவேற்கத்தக்க ஒன்றாகும். மக்கள் அனைவரும் மாநில அரசுகள் அறிவுரைகளின் படி நடமாட்டத்தை குறைக்க உதவி செய்ய வேண்டும். இந்து முன்னணி மத்திய, மாநில அரசுகளுக்கு இந்தக் கொரோனா நோயை ஒழிப்பதற்காக உறுதுணையாக இருக்கும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் இந்து முன்னணி  மாநிலச் செயலாளர்கள் கிஷோர்குமார்  செந்தில்குமார்  உடனிருந்தனர்.

தலைப்புச்செய்திகள்