Saturday, 28th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வேலையிழந்த தொழிலாளர்களுக்கு உணவு அளிக்கும் மும்பை மசூதி

ஏப்ரல் 15, 2020 03:58

வேலை இழந்த பல தொழிலாளர்களுக்கு மும்பை மசூதியில் உணவு வழங்கப்பட்டு வருகிறது

கொரோனா வைரஸால் பில் கேட்ஸ், முகேஷ் அம்பானி போன்ற உலக பணக்காரர்கள் தொடங்கி, குமாரமங்கலம் பிர்லா, பலோன்ஜி மிஸ்த்ரி, கோத்ரேஜ் குடும்பம், ஹிந்துஜா குடும்பம் போன்ற இந்தியப் பணக்காரர்கள் வரை யாரையும் விட்டு வைக்கவில்லை. சாதாரண ஏழை எளிய மக்கள் வரை, எல்லோரும் ஒவ்வொரு விதத்தில் பாதிக்கப்பட்டு இருக்கிறோம்.

ஆனால் அடித்தட்டு மக்கள், அன்றாடம் வேலைக்குச் சென்று பிழைப்பவர்கள், கூலித் தொழிலாளிகள், கட்டுமானத் தொழிலாளர்கள் தான் இந்த பிரச்சனையில் அதிகம் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அப்படி, கொரோனா வைரஸ் காரணமாக லாக்-டவுனால் வேலை இழந்த பல தொழிலாளர்களுக்கு ஒரு மும்பை மசூதி உணவு வழங்கி வருகிறது.

இதுகுறித்து மசுதி நிர்வாகி மெளலானா அதிஃப் சனபலி கூறியதாவது:
வேலை இழந்த பல தொழிலாளர்களுக்கு உணவு அளிக்கிறோம். மும்பை சகினகா மசூதிக்கு அருகில் வாழும் மக்களுக்குத் தேவையான அரிசி பருப்பு போன்ற அத்தியாவசியப் பொருட்களையும், மசூதி சார்பில் கொடுக்கிறோம். தற்போது பரவிக் கொண்டு இருக்கும் கொரோனா வைரஸைப் போல பசியும் ஒரு கொடூரமான விஷயம் தான். பசி மதத்தைப் பார்ப்பதில்லை. அது எல்லோரையும் பாதிக்கும். எங்கள் குறிக்கோள் ஒன்று தான். பசியோடு யாரும் தூங்கக் கூடாது. கொரோனா வைரஸை எதிர் கொள்ள அரசு வலியுறுத்தும் சமூக விலகளை கடை பிடித்து தான் உணவுகளை பரிமாறுகிறோம். அதோடு உணவை சுத்தமான முறையில் தயாரித்து தருகிறோம்.

இவ்வாறு மெளலானா அதிஃப் சனபலி கூறினார்.

தலைப்புச்செய்திகள்