Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சீனாவிலிருந்து மருத்துவ துறையினருக்கு தேவையான 50 ஆயிரம் பி.பி.இ. கிட் - கள் இந்தியா வந்தன

ஏப்ரல் 16, 2020 06:49

கவுஹாத்தி: கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள மருத்துவ துறையினருக்கு தேவையான பி.பி.இ. கிட்  சீனாவிலிருந்து அசாமின் கஹாத்தி வந்தடைந்தது.

இந்தியாவில் பரவியுள்ள கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நோய் தடுப்பு நடவடிக்கைளை மேற்கொண்டு வருகின்றன. எனினும் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

போதிய மருத்துவ உபகரணங்கள் இருந்த போதிலும்,மருத்துவர்களுக்கு தேவை உபகரணங்கள் தேவை என்ற நிலையில், மருத்துவத்துறையில் சொல்லப்படும் பி.பி.இ. கிட் எனப்படும் முழு உடலுக்கான பிரத்யேக பாதுகாப்பு உபகரணங்கள் சரக்கு விமானம் மூலம் சீனாவின் குவாங்சு மாகாணத்திலிருந்து சுமார் 50 ஆயிரம் பி.பி.ஐ., கிட் கள் நேற்று இரவு அசாம் மாநிலம் கவுஹாத்தி விமான நிலையம் வந்திறங்கின.இவை இன்று கோல்கட்டா மற்றும் டெல்லி செல்ல உள்ளதாக அசாம் சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
 

தலைப்புச்செய்திகள்