Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கொரோனா பாதிப்பு குறித்து கூட்டணி கட்சி தலைவர்களுடன் ஸ்டாலின் அவசர ஆலோசனை

ஏப்ரல் 16, 2020 07:38

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்து இன்று திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினர்.

கொரோனா வைரஸ் தொடர்பாக மத்திய - மாநில அரசுகளின் அணுகுமுறை குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற இருந்த அனைத்து கட்சி கூட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் திமுக கூட்டணிக் கட்சிகளின் கூட்டம் காணொலி காட்சி மூலம் இன்று நடைபெறும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

அதன்படி இன்று காலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலி காட்சி மூலம் கூட்டணி கட்சிகளின் ஆலோசனை நடைபெற்றது. இந்த ஆலோசனையில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், கே.பாலகிருஷ்ணன், கி.வீரமணி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.

தலைப்புச்செய்திகள்