Saturday, 29th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கொரோனா பரவல் தடுப்பு குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை

ஏப்ரல் 16, 2020 07:53

சென்னை: கொரோனா பரவலை தடுப்பது தொடர்பாக இன்று மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், மாவட்டங்களில் தற்போதைய நிலை குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.

கொரோனாவை தடுக்க ஒவ்வொரு மாவட்ட வாரியாக செய்து வரும் பணிகள், எடுக்கப்பட வேண்டிய பணிகள், குறித்தும் ஹாட் ஸ்பாட்டாக அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்தி நடவடிக்கைகள் எடுப்பது குறித்தும் இந்த கூட்டத்தில் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை செய்தார்.

மேலும் மாவட்டத்திற்கு என்னென்ன வசதிகள் தேவை என்பது குறித்தும் மாவட்ட ஆட்சியர்களிடம் முதலமைச்சர் பழனிசாமி கருத்து கேட்டு அறிந்தார்.

ஆலோசனை கூட்டத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், தலைமைச் செயலாளர் சண்முகம், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


 

தலைப்புச்செய்திகள்