Sunday, 29th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வேப்பூரில் செல்போன் கடையில் ரூ.1 லட்சம் கொள்ளை: ரூ.3 லட்சம் ரொக்கம் தப்பியது

ஏப்ரல் 16, 2020 08:55

பெரம்பலூர்: வேப்பூரில் செல்போன் கடையில் பூட்டை உடைத்து ரூ.70 ஆயிரம் பணம் மற்றும் 30 ஆயிரம் மதிப்புள்ள செல்போன்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். ரூ.3 லட்சம் ரொக்க பணத்தை கடையில் தனியாக மறைத்து வைத்திருந்ததால் தப்பியது.

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள கொத்தவாசலை தெருவைச் சேர்ந்தவர் பெரியசாமி (38). இவர் வேப்பூர் பஸ் நிலையத்தில் செல்போன் கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் பழுதடைந்த செல்போன்களை சரிசெய்ய வாங்கி வைத்துள்ளார். இந்நிலையில் வாடிக்கையாளர்கள் அந்த செல்போன்களை கேட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து பழுது நீக்கிய செல்போன்களை எடுத்து தர கடைக்கு வந்து போன்களை எடுத்துக் கொடுத்து விட்டு கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார்.

மேலும் இவரது பெற்றோரின் மருத்துவ செலவிற்காக ரூ.3 லட்சம் ரொக்க பணத்தை கடையில் தனியாக மறைத்தும் கடையின் கல்லாப்பெட்டி யில் ரூ.70 ஆயிரம் ரொக்க பணமும் ரூ.30 ஆயிரம் மதிப்பிலான புதிய செல்போன்களையும் வைத்து இருந்தார். மர்ம நபர்கள் கடையின் சட்டர் பூட்டை உடைத்து உள்ளே சென்று கல்லாபெட்டியில் இருந்து ரூ.70 ஆயிரம் பணம் மற்றும் 30 ஆயிரம் மதிப்புள்ள செல்போன்களை கொள்ளையடித்து சென்றனர்.

தகவல் அறிந்ததும் குன்னம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் மோப்பநாயும் வரவழைக்கப்பட்டு சோதனை நடைபெற்றது. பெற்றோரின் மருத்துவ செலவிற்காக தனியாக மறைத்து வைத்திருந்த ரூ.3 லட்சம் இந்த கொள்ளையில் இருந்து தப்பியுள்ளது குறிப்பிடதக்கது.

தலைப்புச்செய்திகள்