Sunday, 7th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

144 தடை உத்தரவை மீறி கறி சாப்பாடு விருந்து வைத்து முகநூலில் வெளியிட்ட ஒருவர் கைது

ஏப்ரல் 16, 2020 03:13

கும்பகோணம்: கும்பகோணம் அடுத்த கபிஸ்தலம் அருகே 144 தடை உத்தரவை மீறி கறி சாப்பாடு விருந்து வைத்து முகநூலில் வெளியிட்ட ஒருவர் கைது செய்யப்பட்டார்.

கபிஸ்தலம் அருகே உள்ள தியாக சமுத்திரம் வடக்கு தெருவில் வசிப்பவர் சின்ன குஞ்சு மகன் சிவகுரு வயது 29 இவர் திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் பணியாற்றி வந்தார். சமீபத்தில்கொரோனா வைரஸ் தாக்குதலால் மத்திய மாநில அரசுகள் ஊரடங்கு உத்தரவு மற்றும் 144 தடை உத்தரவு, போடப்பட்டதன் எதிரொலியாக திருப்பூரில் இருந்து தன் சொந்த ஊரான தியாக சமுத்திரம் கிராமத்திற்கு சிவகுரு வந்துவிட்டார். 

இந்தநிலையில் சிவகுரு திருப்பூரில் இருந்து சொந்த ஊருக்கு வந்த மகிழ்ச்சியை கொண்டாடும் வகையில் சொந்த ஊரில் இருந்த தனது நண்பர்கள் மற்றும் சிலரை அழைத்துக்கொண்டு தியாக சமுத்திரம் அய்யர் வயல் எனும் திடலில் ஆடு வெட்டி கறி சமைத்து சுமார் 50க்கும் மேற்பட்டோர் ஒரே இலையில் வைத்து சமைத்து சாப்பிட்டு உள்ளனர். 

அத்துடன் தற்பொழுது 144 தடை உத்தரவு போடப்பட்டது தை மீறியும் தோற்றுப் பரவும் சூழ்நிலை தெரிந்தும் கறி சமைத்து சாப்பிட்டு அதனை முகநூலில்  வெளியிட்டுள்ளார். இதனை அறிந்த தியாக சமுத்திரம் கிராம நிர்வாக அலுவலர் திவ்யா தேவி வயது 26 என்பவர் கபிஸ்தலம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின்பேரில் பாபநாசம் டிஎஸ்பி நந்தகோபால், கபிஸ்தலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் காந்திமதி, மற்றும் போலீசார் கறி சாப்பாடு சமைத்து 144 தடை உத்தரவை மீறி செயல்பட்ட சிவகுரு வயது 29 என்பவரை கைது செய்து மேலும் அதே ஊரை சேர்ந்த வேதநாயகம் மகன் சக்திவேல், ஜெயராமன் மகன் சங்கர், அரியமுத்து மகன் மணிகண்டன், உள்ளிட்ட பலர் மீது வழக்குப்பதிவு செய்து வலைவீசி தேடி வருகின்றனர்.

தலைப்புச்செய்திகள்