Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஊரடங்கினால் கொரோனாவை ஒழித்து விடமுடியாது: ராகுல் காந்தி

ஏப்ரல் 16, 2020 03:51

“கொரோனா தொற்று நோயை ஒழிக்க லாக்-டவுன் மட்டுமே தீர்வு அல்ல; நாடு தழுவிய அளவில் மக்களுக்கு பரிசோதனை நடத்தப்பட வேண்டும்,” என்று முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.
வீடியோ கான்க்ஃபரன்ஸ் மூலம் ராகுல் காந்தி நேற்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

கொரோனா வைரஸ் தடுப்பை கேரளா மாநிலம் வெற்றிகரமாக தடுத்திருக்கிறது. இதை பிற மாநிலங்களும் பின்பற்ற வேண்டும். லாக்-டவுன் என்பது கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்கான தீர்வு அல்ல. லாக்-டவுன் முடிந்த பின்னரும் கூட கொரோனா வைரஸ் உயிர்வாழத்தான் செய்யும். பரவத்தான் செய்யும்.

ஆகையால், லாக்டவுன் என்பது கொரோனா தொற்று நோயை தற்காலிகமாக தடுக்கத்தான் உதவும். மாநிலங்கள், மாவட்டங்கள் அளவில் கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
ஒட்டுமொத்தமாக நாடு தழுவிய அளவில் கொரோனா பரிசோதனைகளை நடத்திப் பார்க்க வேண்டும். இதற்கான வசதிகளை மாநிலங்களுக்கு மத்திய அரசு செய்து தர வேண்டும். ஆகையால், ஜி.எஸ்.டி. நிலுவைத் தொகையை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு தர வேண்டும். மத்திய அரசானது மிகப் பெரிய நெருக்கடியை தள்ளிப் போட்டு வருகிறது. ஏழைகளுக்கு உணவு கிடைப்பதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும். வேலை இல்லா திண்டாட்டத்தை சரி செய்ய மத்திய அரசு தயாராக இருக்க வேண்டும்.

சிறு, குறு தொழில்களைப் பாதுகாக்கின்ற நட வடிக்கையை மத்திய அரசு எடுக்க வேண்டும். பிற மாநில தொழிலாளர்கள் பிரச்சனையை மத்திய அரசு கவனமுடன் கையாள வேண்டிய கட்டாயம் இருக்கிறது.
இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.

தலைப்புச்செய்திகள்