Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கேரள போலீஸ் மீது மனித உரிமை கமிஷன் வழக்கு

ஏப்ரல் 17, 2020 06:53

கேரளாவின் கொல்லம் மாவட்டம், குளத்துப்புழா கிராமத்தை சேர்ந்த, 65 வயது முதியவர், உடல்நலக் கோளாறு காரணமாக, புனலுாரில் உள்ள தாலுகா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை முடிந்து நேற்று முன்தினம், 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டார்.

முதியவரை, அவரது மகன், ஆட்டோவில் வீட்டுக்கு அழைத்து சென்றார். ஊரடங்கு காரணமாக, ஆட்டோவை போலீசார் தடுத்து நிறுத்தினர். அதற்கு மேல் செல்ல அனுமதி மறுத்தனர். இதையடுத்து, புனலுார் டவுன் வரை, 1 கி.மீ., துாரத்திற்கு, உடல்நிலை சரியில்லாத தந்தையை, கையில் சுமந்தபடி, அவரது மகன் நடந்து சென்றார்.

இது குறித்த செய்தி, கேரள ஊடகங்களில் வெளியானது. இதையடுத்து, இந்த விவகாரம் குறித்து, கேரள மனித உரிமை கமிஷன், தானாக முன்வந்து, வழக்கு பதிவு செய்துள்ளது.

தலைப்புச்செய்திகள்