Wednesday, 3rd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

திருச்சியில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் உரியவா்களிடம் ஒப்படைப்பு

ஏப்ரல் 17, 2020 09:28

திருச்சி்: திருச்சி புறநகரில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் உரியவா்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

திருச்சி புறநகரில் ஊரடங்கு தொடங்கிய நாளிலிருந்து 144 தடை உத்தரவை மீறியதாக 9,214 வழக்குகள் பதிவு செய்து 10274 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். 8545 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு சுப்பிரமணியபுரம் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஊரடங்கு மீறலின் போது பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை வழங்க தமிழக காவல்துறை உத்தரவிட்டுள்ளது. இதைத் தொடா்ந்து திருச்சி மாவட்டத்தில் கடந்த மாா்ச் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களின்ஆவணங்களை காவல்துறையில் சமா்ப்பித்த உரிமையாளா்களுக்கு அவா்களின் வாகனங்கள் ஒப்படைக்கப்பட்டது. இவ்வாறாக 486 வாகனங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதேபோல திருச்சி மாநகரில் பறிமுதல் செய்யப்பட்டு கே.கே.நகா் ஆயுதப்படை மைதானத்தில் வைக்கப்பட்டிருந்த சுமாா் 4500 வாகனங்களில் 215 வாகனங்கள் ஆவணங்கள் சரிபாா்ப்புக்கு பிறகு உரியவா்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மீதமுள்ள வாகனங்கள் அடுத்தடுத்த நாள்களில் காவல்நிலையத்தில் இருந்து வாகன உரிமையாளா்களுக்கு தகவல் தெரிவித்த பிறகு உரிய ஆவணங்களை கொண்டு வரும்பட்சத்தில் ஒப்படைக்கப்படும் என காவல்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

தலைப்புச்செய்திகள்