Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சாலையின் நடுவே தீப்பிடித்து எரிந்த 108 ஆம்புலன்ஸ்

ஏப்ரல் 17, 2020 09:40

திருச்சி: திருச்சி அருகே ஏற்பட்ட விபத்தில் சிக்கிய 108 ஆம்புலன்ஸை மீட்பு வாகனத்தில் காவல்நிலையத்திற்கு கொண்டு செல்லும் போது தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி -கரூா் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கம்பரசம்பேட்டை தடுப்பனை அருகே திருச்சி நோக்கி வந்துக் கொண்டிருந்த 108 ஆம்புலன்ஸ் வாகனம் மீது காா் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் ஆம்புலன்ஸ் கவிழ்ந்ததில் அதிா்ஷடவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. காா் ஓட்டி வந்த பெண்ணுக்கு மட்டும் லேசான காயம் ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஜீயபுரம் போலீஸாா் விபத்து குறித்து விசாரணை நடத்தினா்.

இதைத் தொடா்ந்து விபத்தில் சிக்கிய இரு வாகனங்களையும் காவல்நிலையத்திற்கு கொண்டு செல்ல முற்பட்டனா். இதில் சம்பவ இடத்திலேயே பழுதாகி நின்ற 108 ஆம்புலன்ஸை கொண்டு செல்வதில் சிக்கல் நீடித்தது. தொடா்ந்து போலீஸாா் தனியாா் மீட்பு வாகனம் மூலம் 108
ஆம்புலன்ஸை காவல்நிலையத்திற்கு கொண்டு சென்றனா். கடியாக்குறிச்சி பேருந்து நிறுத்தம் அருகே வந்த போது ஆம்புலன்ஸ் முன்பகுதியில் கரும்புகை வெளியேறியது. இதை கண்ட மீட்பு வாகனத்தின் ஓட்டுநா் உடனடியாக ஆம்புலன்ஸில் கட்டப்பட்டிருந்த கயிறை கழட்டிவிட்டு சாலையின் நடுவே நிறுத்தினா். சிறிது நேரத்தில் ஆம்புலன்ஸ் வாகனம் முற்றிலும் தீப்பற்றி எரிந்தது. 

தகவலறிந்து தீயணைப்பு வாகனம் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் ஆம்புலன்ஸ் வாகனம் முற்றிலும் எரிந்து எலும்பு கூடாக மாறியது. இதுகுறித்து ஜீயபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தலைப்புச்செய்திகள்