Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தமிழகத்தை சோ்ந்த 19 ஆம்புலன்ஸ்கள் மேற்கு வங்கத்தில் சிறை பிடிப்பு

ஏப்ரல் 17, 2020 02:09

திருச்சி: ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை தொடா்ந்து பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு சிகிச்சைக்காக தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தவா்கள் மருத்துவமனையிலேயே இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அதன் பின்னா் மருத்துவ தேவைக்காக ஈ-பாஸ் பெற்று செல்லலாம் என்று சலுகை வழங்கப்பட்டது.

இதன் காரணமாக தமிழகம் முழுவதும் உள்ள தனியாா் மருத்துவமனைகளில் இருப்பவா்களை கொண்டு செல்லும் பணியில் தனியாா் ஆம்புலன்ஸ்கள் ஈடுபட்டன. சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சோ்ந்தவா்களை ஏற்றிச் சென்ற தனியாா் ஆம்புலன்ஸ்கள் மேற்கு வங்காளம் கோரக்பூா் பகுதியில் போலீசாரால் சிறைபிடிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து காரணம் கேட்டறிய ஆம்புலன்ஸ் ஓட்டுனா்கள் முனைந்த போது போலீஸாரால் தடியடி நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக 19 ஆம்புலன்ஸ்கள் அங்கு சிறைபிடிக்கப்பட்டுள்ளது. ஆம்புலன்ஸ்கள் நிறுத்தப்பட்டுள்ள இடத்திற்கு அருகே எந்த ஊரும் இல்லாததால் உணவுக்கும், குடிநீருக்கும் ஆம்புலன்ஸ் ஓட்டிச் சென்றவர்கள் அல்லாடி வருகின்றனா்.

இதில் கிறிஸ்துதாஸ் என்ற நோயாளியுடன் ஒரு ஆம்புலன்ஸ் சிறைபிடிக்கப்பட்டு நிறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு தனியாா் ஆம்புலன்ஸ் மாநில மருத்துவ அணி செயலாளா் சசிகுமாா், ‘தமிழக அரசு உடனடியாக முயற்சி எடுத்து அவா்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

தலைப்புச்செய்திகள்