Friday, 5th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கரூரில் பேக்கரிகள் திறப்பு: கூட்டம் அலைமோதுகிறது

ஏப்ரல் 18, 2020 08:29

கரூர்: கரூரில் பேக்கரிகள் திறக்கப்பட்டதால் மக்கள் கூட்டம் அலைமோதியது.

கரூர் மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக ஓட்டல்களில் பார்சல் உணவு வழங்க மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனால் கரூர் நகரில் பரவலாக ஓட்டல்கள் மூடப்பட்டு இருக்கின்றன. கரூர் கோவை ரோடு, திண்ணப்பா கார்னர், வெங்கமேடு, பழையபைபாஸ் ரோடு
உள்ளிட்ட இடங்களில் சில ஓட்டல்கள் திறக்கப்பட்டு பார்சல் மூலம் உணவு விற்பனை செய்து வருகிறார்கள். இந்தநிலையில் கரூர் ஜவகர்பஜார் கோவை ரோடு உள்ளிட்ட இடங்களில் பேக்கரிகள் திறக்கப்பட்டன. அங்கு இனிப்புகள், கார வகைகளை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியபடி இருந்தது. பார்சலில் மட்டும் இனிப்பு காரங்கள் வழங்கப்பட்டன.

கூட்டத்தை கண்டதும் பேக்கரி உரிமையாளர்கள் வெளியே வந்து சமூக இடைவெளியை கடைபிடித்து வாங்கி செல்லுமாறு அறிவுறுத்தினார்கள். நமது கலாசாரத்தில் அறுசுவை உணவு முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும். தற்போது கொரோனா ஊரடங்கினால் வீடுகளுக்குள் மக்கள் முடங்கியிருப்பதால் 3 வேளையும் உணவு பொருளையே சாப்பிடுகின்றனர். இதனால் இனிப்பு பிரியர்கள் பேக்கரி எங்கு திறந்துள்ளது என தேடி அலைந்ததையும் காண முடிந்தது.

தலைப்புச்செய்திகள்