Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தமிழக அரசு வெளியிட்ட நன்கொடையாளர்களின் பட்டியலில் நடிகர் லாரன்ஸ் பெயர் இல்லை: ரசிகர்கள் வருத்தம்

ஏப்ரல் 18, 2020 10:31

சென்னை: நடிகர் லாரன்ஸ் பிரதமர், முதல்வர் மற்றும் ஃபெஃப்ஸி அமைப்பு என பல்வேறு சங்கத்தினருக்கு நிதியுதவி வழங்கியுள்ளார். ஆனால், தமிழக அரசு வெளியிட்ட நன்கொடையாளர்களின் பட்டியலில் அவரது பெயர் இடம் பெறவில்லை என்று ரசிகர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

கொரோனா வைரஸின் கொடூர தாண்டவத்தால் நாடு முழுக்க ஊரடங்கு உத்தரவு வரும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் தொழில்துறை முடங்கியுள்ளது. இதனால் அரசுக்கும், மக்களுக்கும் பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
பெரும்பாலான தனியார் மற்றும் அரசு நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களை வீட்டில் இருந்தே பணியாற்ற அறிவுத்தியுள்ளது. ஊரடங்கால் தினக்கூலி மற்றும் வருவாயை நம்பியுள்ள தொழிலாளாலர்கள், சிறு குறு வியாபாரிகள், சாலையோர கடை வியாபாரிகள் என பலரும் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். வறுமையில் தவிக்கும் பலருக்கும் திரைத்துறையை சேர்ந்த பிரபலங்கள் பலரும் சத்தமில்லாமல் உதவி செய்து வருகின்றனர்.

அந்த வகையில் நடிகர் லாரன்ஸ் பலருக்கும் நிதியுதவி வழங்கி வருகிறார். கடந்த வாரம் பிரதமர் மற்றும் முதல்வர் நிவாரண நிதிக்கு தலா 50 லட்சம் ரூபாய், திரைப்பட தொழிலாளர் சம்மேளனமான ஃபெஃப்ஸி அமைப்புக்கு 50 லட்சம் ரூபாய், நடனக் கலைஞர்கள் சங்கத்திற்கு 50 லட்சம் ரூபாயும் நிவாரணத் தொகையாக அறிவித்தார். மேலும், மாற்றுத் திறனாளி இளைஞர்களுக்கு 25 லட்சம் ரூபாயும் அறிவித்தார். ஏழை தொழிலாளர்கள் மற்றும் தான் பிறந்த இடமான ராயபுரம் தேசிய நகர் பகுதியை சேர்ந்த ஏழை மக்களுக்கு 75 லட்சம் ரூபாய் என மொத்தமாக 3 கோடி ரூபாய் அறிவித்தார். அதனை தொடர்ந்து தூய்மைப் பணியாளர்களுக்கு ரூ. 25 லட்சம் நிதியுதவி செய்வதாக அறிவித்தார் லாரன்ஸ்.

இந்நிலையில் திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத்திற்கு 15 லட்சம் ரூபாய் வழங்கியிருக்கிறார். இப்படி பலருக்கும் உதவி செய்து வருகிறார் லாரன்ஸ். ஆனால், தமிழக அரசு வெளியிட்ட நன்கொடையாளர்களின் பட்டியலில் அவரது பெயர் இடம் பெறவில்லை. இதனால் லாரன்ஸ் அறிவிக்கும் நிதி சம்பந்தப்பட்டவர்களை சென்றடைகிறதா? ஏன் லாரன்ஸின் பெயர் இடம் பெறவில்லை? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருவதுடன் வருத்தத்தில் உள்ளனர்.

தலைப்புச்செய்திகள்