Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சென்னை, சேலத்தில் ரேபிட் டெஸ்ட் கருவி மூலம் கொரோனா பரிசோதனை துவக்கம்

ஏப்ரல் 18, 2020 12:07

சென்னை: தமிழகத்தில் ரேபிட் டெஸ்ட் கருவி மூலம் கொரோனா பரிசோதனை செய்வது சேலம் மற்றும் சென்னையில் துவங்கியது.

கொரோனா தொற்றை விரைவாக கண்டறிய ரேபிட் டெஸ்ட் கருவிகளை தமிழக அரசு சீனாவில் இருந்து கொள்முதல் செய்தது. இதில், முதல்கட்டமாக 24 ஆயிரம் கருவிகள் நேற்று சென்னை வந்தன. இதில் ஆயிரம் கருவிகள் சேலம் வந்தடைந்தது. இதனையடுத்து சேலத்தில் ரேபிட் டெஸ்ட் கருவிகள் மூலம் கொரோனா பரிசோதனை செய்யும் பணி துவங்கியது. இந்த பரிசோதனை மூலம், அரை மணிநேரத்தில் முடிவுகள் கிடைக்கும். முதலில், 18 பேருக்கு நடந்த பரிசோதனையில் கொரோனா இல்லை என்பது தெரியவந்தது.

சென்னை, ராஜிவ்காந்தி மருத்துவமனையிலும் ரேபிட் டெஸ்ட் கருவி மூலம் கொரோனா பரிசோதனை துவங்கியது. கோவையிலும், இந்த கருவி மூலம் பரிசோதனை துவங்கியது.

இதனிடையே, தமிழகத்திற்கு மத்திய அரசு ஒதுக்கிய 12 ஆயிரம் ரேபிட் டெஸ்ட் கருவிகள் வந்துசேர்ந்துள்ளதாக தமிழக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தலைப்புச்செய்திகள்