Saturday, 28th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நட்பு, ஒற்றுமையின் உச்சம்: இந்தியாவுக்கு கஜகஸ்தான் நன்றி

ஏப்ரல் 19, 2020 06:28

புதுடெல்லி: கஜகஸ்தானுக்கு மருத்துவ பொருட்களை அனுப்பிய இந்தியாவுக்கும், பிரதமர் மோடிக்கும் அந்நாட்டு அதிபர் 'நட்பின் உச்சம்' என நன்றியை வெளிப்படுத்தி உள்ளார்.

உயிர்க்கொல்லி கொரோனா வைரசை எதிர்த்து போராடி வரும் நட்பு நாடுகளுக்கு, 'ஹைட்ராக்சிக்ளோரோக்வின்' மருந்தை இந்தியா ஏற்றுமதி செய்து வருகிறது. இந்நிலையில், மருத்துவ பொருட்களை அனுப்பி வைத்ததற்காக, இந்தியாவுக்கும், பிரதமர் மோடிக்கும் கஜகஸ்தான் அதிபர் காசிம் ஜோமார்ட் டோகாயேவ் நன்றி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டதாவது: கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த, கஜகஸ்தானுக்கு மருத்துவப் பொருட்களை நன்கொடையாக வழங்கியதற்காக, இந்திய அரசுக்கும் தனிப்பட்ட முறையில் பிரதமர் மோடிக்கும் மனமார்ந்த நன்றி. இது நட்பு, ஒற்றுமையின் உச்சம். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

தலைப்புச்செய்திகள்