Sunday, 7th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

காங்கிரஸ் முதல்வர்கள் மோடி ஆதரவு நிலைபாட்டால் ராகுல் அதிருப்தி

ஏப்ரல் 19, 2020 06:36

சென்னை: கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த, அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு, ஏறக்குறைய அனைத்து கட்சிகளும் ஆதரவு அளித்து வருகின்றன.

சில கட்சிகள், இந்த பேராபத்தையும் அரசியலாக்கி வருகின்றன. தி.மு.க., ஸ்டாலினும், தினமும் அறிக்கை விட்டு, தமிழக அரசை குறை கூறிக் கொண்டிருக்கிறார். ராகுலை பின்பற்றி, மோடியையும் ஸ்டாலின் விமர்சித்துக் கொண்டிருக்கிறார். சமீபத்தில், 'வீடியோ கான்பரன்ஸ்' மூலம், பத்திரிகையாளர்களைச் சந்தித்த ராகுல், ஒரு மணி நேரம் ஆலோசனைகளை அள்ளி வீசியதோடு, 'நான், பிப்ரவரியிலேயே கொரோனாவைப் பற்றி சொன்னேன்; ஆனால், மோடி கண்டுகொள்ளவில்லை' என, சகட்டுமேனிக்கு விமர்சித்தார்.

இது, காங்., ஆட்சி செய்யும் பஞ்சாப், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநில முதல்வர்களிடம் எதிர் விளைவுகளை ஏற்படுத்தி உள்ளது. பிரதமர் மோடி, அடிக்கடி இந்த முதல்வர்களோடு பேசி, என்னென்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என, ஆலோசித்து வருகிறார். இந்த, காங்., முதல்வர்களும், மோடிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.'விரைவில், காங்., தலைவராக மீண்டும் பொறுப்பேற்க வேண்டும்' என, ராகுலை வற்புறுத்தி வருகிறார், சோனியா. 'அதன் விளைவு தான், மோடிக்கு ஆதரவாக காங்., முதல்வர்கள் மாறும் ரகசியம்' என்றனர், சீனியர் தலைவர்கள்.

தலைப்புச்செய்திகள்