Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தமிழகத்தில் ராணுவ தொழில் வழித்தடம்: நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார்

ஜனவரி 20, 2019 10:13

திருச்சி: தமிழக ராணுவ தொழில் வழித்தடத்தை திருச்சியில் ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று தொடங்கி வைத்தார். சென்னை, ஓசூர், சேலம், கோயம்புத்தூர், திருச்சி ஆகிய இடங்களில் உள்ள ராணுவ தளவாட தொழிற்சாலைகளை இணைக்கும் வகையில் இந்த வழித்தடம் அமைகிறது. இது இரண்டாவது தொழில் வழித்தடம் ஆகும். 
 
இந்த விழாவில் புதிய முதலீடுகள், புதிய ராணுவ தளவாட உற்பத்தி தொழிற்சாலைகள் பற்றிய அறிவிப்புகள் இடம்பெற்றன. இதற்கான கட்டமைப்பு வசதிகளுக்காக மத்திய அரசு ரூ.20 கோடி ஒதுக்கியுள்ளது. 

விழாவில் பேசிய நிர்மலா சீதாராமன், இந்த தொழில் வழித்தடத்தை பாலக்காடு வரை நீட்டிக்க கோரிக்கை வைக்கப்பட்டது. தற்போது அதற்கான சாத்தியம் இல்லை என தெரிவித்தார். ஏற்கனவே, உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் அலிகார் பகுதியில் ராணுவ தொழில் வழித்தடம் செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்புச்செய்திகள்